வீட்டில் இருக்கும் கொசுக்களை நம் முன்னோர்கள் பயன்படுத்திய முறையில் இயற்கையாக ஒழிக்கும் வழிகள்
கொசுக்களினால் மிகக் கொடிய நோய்கள் வேகமாக பரப்பப்படுகின்றன. கொசுக்களை விரட்ட பயன்படுத்தப்படும் செயற்கையான மருந்துகளும் நாளடைவில் உடலுக்கு நோய்களை தரக்கூடியவை, இயற்கையான முறையில் வீட்டில் இருக்கும் கொசுக்களை எளிதாக விரட்டலாம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொசுக்களினால் மிக விரைவாக நோய்கள் பரப்பப்பட்டு பாதிப்பு அடைகின்றனர்.
வேப்பிலை அனைத்து வகையிலும் இயற்கையான மருந்தாகப் பயன்படக்கூடியது.
மாலை நேரத்தில் ஒரு கைப்பிடி அளவு வேப்பிலை எடுத்து கொள்ளவும். காய்ந்த வேப்பிலை குச்சிகளையும் எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பழைய அகன்ற பாத்திரத்தில் முதலில் வேப்பிலை குச்சிகளை போட்டு நெருப்பை பற்ற வைக்கவும். நன்றாக நெருப்பு எரிய ஆரம்பித்த பின் அதற்கு மேல் பச்சை வேப்பிலை கொத்துகளை பரவலாகப் போடவும். இப்பொழுது இதில் இருந்து வரும் புகையினை மாலை நேரத்தில் வீடு முழுவதும் காட்டுவதினால் வீட்டில் உள்ள கொசுக்கள் அனைத்தும் ஒழிந்து விடும்.இரவு முழுவதும் கொசு தொல்லை இன்றி நிம்மதியாக உறங்கலாம். இது உடலுக்கு எந்தவித தீங்கையும் தராது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக