வெள்ளி, 13 மார்ச், 2020

முழுக்க முழுக்க அழகான கற்பனைகளால் உருவான காதல் கவிதை இது

முழுக்க முழுக்க அழகான கற்பனைகளால் உருவான காதல் கவிதை இது


கனவே கலையாதே! ---சிறுகதை.
மெல்லிய காற்றின் வரவால் சிதறி கிடந்த சாலை பூக்கள் அவள் காலடியை சேர்ந்தது .அழகான மாலை நேரம்.வாகனங்களின் கூச்சல் இல்லாத அமைதி.அந்த நீல நிற சிமெண்ட் பலகையில் ,கையில் அழகான பூக்களுடன் அந்த தேவதை.மெல்லிய புன்னகை .வானவில் இரட்டை கோடுகளாய் உதடுகள் ,கருமேக புணர்ச்சியாய் கூந்தல்,கவி தேடும் விழிகளுடன் அவள்.உணர்வற்று போனவனாய் தனது இதய வங்கியில் அவளை கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து கொண்டு இருந்த அருள்.வார்த்தைகளே இல்லாத கலப்பு முறை.தள்ளி நின்றே உணர்வால் தீண்ட தேகம் சிலிர்த்து நாணம் ஏற்கும் அவள்.காற்றில் பரவும் காதலி சுவாசத்தை தனக்குள் சிறை பிடிக்கும் காதலனின் தனித்திறன் காலம்.அவளை மெதுவாய் நெருங்கி தனது கரங்களால் கன்னத்தை பற்ற,அவளும் விருப்பமாய் தலை கவிழ,அவன் விழி வழி பாயும் போது , ஆர்வம் அதிகமாகி கண் விழிக்க சுற்றி இருந்த அறை இது கனவு தான் என்றதும் துடிக்கும் இதயத்துடன் ,அரைகுறை கனவால் தூக்கத்தை இழந்தான் அருள்.அவன் இதுவரை இப்படி ஒரு கனவை கண்டதில்லை.அந்த பெண்ணின் முகம் திரும்ப திரும்ப அவன் முன்பு தோன்றி அமைந்தது .மாடியில் சென்று சிகரேட் புகைத்து சற்று இளைப்பாறியவுடன் தூக்க முயற்சி செய்தான் .
மறுநாள் எழுந்ததில் இருந்து இரவு வந்த பெண்ணின் முகம் இதற்கு முன் சந்தித்த முகமா என்று ஞாபக படுத்தினான்.முடிவில் அது புது தோற்றம் என்பது உறுதியானது .அலுவலகம் சென்றதும் கனவை தாண்டி நிஜத்திற்குள் தன்னை புகுத்தினான்.இருந்தாலும் அவனுடைய சின்ன தனிமையிலும் அவள் தோன்றி மறையாமல் இல்லை.மறுநாள் இரவு அருள் தனது தூக்கத்தில் வாய் உளறுவதை பார்த்த அவனோட அறை நண்பன் மகேஷ் பதறி போய் எழுப்ப ,எழுந்த அருள் அவனிடம் "எதுக்குடா எழுப்புனா.அவ இன்னைக்கு பேச போனா.அதுக்குள்ள எழுப்பிட்ட.இனி எப்படி தூக்கம் வரும்.அய்யோ என்னால முடியலையே"என்றதும் மகேஷ் அவனை பார்த்து அதிர்ச்சியாகி அமைதியாய் தூங்கி போனான்.மறுநாள் காலை எழுந்ததும் அருள் மகேஷ்கிட்ட வந்து"ஸாரி மச்சான்.ராத்திரி ஆனா ஒரு கனவு வருது .ஒரு பொண்ணு ரேகுலரா வர்றா.சும்மா தேவதை மாதிரி .ஆனா பேசறது இல்ல.நேத்து பேச வாய திறந்தா நீ எழுப்பிட்ட அது தான் கோபத்துல திட்டிட்டேன் ஸாரி"என்றதும் மகேஷ் "முதல்ல நல்ல டாக்டர்ட்ட பாரு"என்று கிளம்பினான் .
அன்று இரவும் அருள் தூக்கத்தில் சிரித்து கொண்டே இருந்தான் .இதை கவனித்த மகேஷ் அவனை எழுப்பவில்லை.அவன் புரிந்து கொண்டான் அருள் அந்த கனவை விரும்புகிறான் என்று.ஆனால் தினமும் ஒரே கனவு திரும்ப திரும்ப வருவது மட்டும் கொஞ்சம் நம்பும்படி இல்லை என்பதை உணர்ந்தான் .மறுநாள் காலை வழக்கத்தை விட அருள் சுறுசுறுப்பாக ஆபிஸ் கிளம்பினான் .அவனுடைய நடவடிக்கை புதிதாக இருப்பதை உணர்ந்தான் மகேஷ்.அருளை ரோம்ப வருஷமா தெரியும் அவனுக்கு .அருள் வெளியூரில் இருந்து வந்து தங்கி வேலை பாத்தாலும் ரோம்ப கட்டுபாடா இருப்பான் .எந்தவிதமான கெட்டப்பழக்கமும் கிடையாது சிகரேட் தவிர.ஆனால் இது தொடர்ந்தது .அருள் தினமும் கனவு கண்டான் .ஒரு நாள் தனக்குத் தெரிந்த டாக்டரிடம் அழைத்து சென்றான் மகேஷ்.அவனை முழுவதும் பரிசோதித்த டாக்டர் மகேஷிடம்"பயப்படாதீங்க மகேஷ்.இது பயபடுற விஷயம் இல்ல.இது ஒரு மனசோட தேடல்.இவ்வளவு நாள் அருள் ஆசைப்பட்ட ஒரு விஷயம் கனவா வந்திருக்கு .ஆனா அதுக்கு அப்புறம் வந்தது எல்லாம் அவருக்கே தெரியாமல் அவரே உருவாக்குன நினைவுகள் .தனக்கு பிடிச்ச பொண்ணோட அவரே வாழ்ற உருவாக்குன அழகான நினைவுகள் .அவர் வாழ்க்கையில் நிஜத்திற்குள் ஒரு பொண்ணு வந்தா இந்த பொண்ணு தானா போயிருவா.அழகான கனவா மட்டுமே போயிருவா .டிரிட்மெண்ட் வேணாம்.கனவுல மட்டும் எழுப்பாதீங்க."என்று சிரித்தார்.
ஒரு நாள் அவனோட அப்பாகிட்ட போன்ல பேசி பொண்ணு பாக்க ஏற்பாடு பண்ண சொன்னேன் .அவுங்களும் தீவிரமா இறங்குனாங்க.அப்ப தான் ஒரு நாள் நானும் அவனும் ஷாப்பிங் போகும்போது அருள் அந்த பொண்ண பாத்தான்.அதே முகம்.அவளே தான் .பதறி போனான் .திகைச்சு போயிட்டான்.சரியான கூட்டம் .அவ பின்னாடியே போனோம் .கண்டுபுடிக்க முடியல.அதைப்பத்தியே தான் பேசிட்டு இருந்தான் .எனக்கு சினிமா மாதிரி இருந்துச்சு .ஆனா அதுக்கு பிறகு அவனுக்கு கனவு வரவேயில்லை.அருள் பழைய வாழ்க்கைக்கு திரும்பிட்டான்.நான் டாக்டருக்கு போன் பண்ணி இதுபற்றி கேட்டான்.அவர்"அவனுக்கு கனவா இருந்தது இப்போ நிஜம்னு தெரிஞ்சு போச்சு .இனி கனவு தேவைப்படாது.ஆனா இனி தான் நிஜத்துல தேட முயற்சி பண்ணுவான்.கவனமா இருங்க "என்றார்.அருள் பைக்ல போகும்போது எல்லாம் எல்லா பக்கமும் அவன் பார்வை இருந்தது.
[சில வாரங்களுக்கு பிறகு ]
அபர்ணா அந்த மெலிதான சாரல் மழையில் அவன் முன்பு நின்றிருந்தாள்.இந்த தூறல் சுகமாகி போனது .தாமதிக்காமல் அவனை கட்டியணைத்து உதட்டோடு உதடு சேர்த்து அவள் உயிரை இவன் இதயம் வரை இறக்கி கொண்டு இருந்தாள்.அவன் அவளை முழுவதுமாக ஏற்று கொண்டவனாய் காதலை உதடு வழி உணர்ந்தான் . அபர்ணா அலறியப்படி கண் விழித்தாள்.சத்தம் கேட்டு குடும்பமே கூடி விட கனவை வெளியில் சொல்லாமல் விழுங்கினாள்.தூக்கம் தூரமானது.காலையில எழுந்து கண்ணாடியில் முகம் பார்க்கும்போது அவளுடைய உதடுகள் அவளுக்குள் ஏதோ ஒரு உணர்வை தூண்டிவிட்டது.தனது தோழி அருணாவிடம் சொன்னதும் சிரித்தபடியே"யாருடி அவன்.பஸ்ட் சீன்லயே கிஸ் பண்ணிட்டான்.கொடுத்து வச்சவன்"என்றாள் .அபர்ணா கனவில் நடந்த இந்த அத்து மீறலுக்காக துடித்து போனான் .மறுநாள் அம்மாவிடம் போய் படுத்தாள்.அவன் அவளை தேடி வந்தான்.கனவுகளை தன்வசப்படுத்தினான்.அவள் உணராத காதல் உணர்வுகளை வாரி இறைத்தான்.இரவுகளை கவிதையாக்கினான்.அவள் கைகளை பற்றி புது உலகம் நோக்கி அழைத்து சென்றான் .அவள் தினமும் இடம் மாறி படுத்தாள் .ஆனால் கனவுகள் மாறவில்லை.அவள் நடவடிக்கைகள் மாறுவதை உணர்ந்த பெற்றோர் வரன் பார்க்க தொடங்க வருகின்ற மாப்பிள்ளைகளை மறுத்தாள் .அவள் அவனை அவர்களிடத்தில் தேடினாள் .அவளை திட்ட ஆரம்பித்தனர் .ஆனால் அவளோ அவனை தாண்டி இன்னோருவன் வராமல் இருக்க இதயத்தை தாழிட்டாள்.
[நாட்கள் உருண்டோடியது]
குடும்பத்தோட அருளின் குடும்பம் கோயம்புத்தூர்க்கு சொந்தகாரங்க கல்யாணத்துக்கு போய் இருந்தாங்க .ஒரு நாள் மாலை நேரம் ரேஸ் கோர்ஸ் வழியா போகும்போது அருள் அந்த சாலை,மரங்கள் ,பலகைகள்,அமைதி எல்லாமே கனவுல பாத்தது போலவே இருந்தது .வண்டி நிறுத்திட்டு அந்த பலகையில் அமர்ந்து கண்களை மூடி கனவில் தெரிந்த தேவதையை நினைவு கூர்ந்தான்.இந்த ஊர் தனக்கு எதையோ காட்ட போவதாக உணர்ந்தான் .
அவன் பைக்கில் கிளம்பியதும் கொஞ்ச நேரத்தில் ஆபிஸ் முடிந்து வந்த அபர்ணாவும்,அருணாவும் அதே பலகையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர் .அப்போது அருணா"அபர்ணா இன்னும் எத்தனை நாளைக்கு கனவோட போராட போற.இனி தள்ளி போட முடியாது .தயது செய்து சரின்னு சொல்லிரு.உன்னோட பீலிங்க வெளியில கூட சொல்ல முடியாது .ப்ளிஸ்"என்றதும் அபர்ணாவும் அவள் கருத்தை ஏற்றாள்.
அபர்ணாவை பெண் பார்க்க அன்று மாப்பிள்ளை வீட்டார் வருவதால் ஆபிஸில் இருந்து சீக்கிரமா வந்து கிளம்பி தயார் ஆனாள்.மாப்பிள்ளை வீட்டார் வந்தனர் .இரு வீட்டாரும் சகஜமாக பேசி கொண்டு இருந்தனர் .அப்போது மாப்பிள்ளையும்,அபர்ணாவும் மாடியில் நின்று பேசிக்கொண்டு இருக்கும்போது மாப்பிள்ளை வாசல எட்டி பாத்துட்டே இருந்தார்.அவரிடம் அபர்ணா "யார பாக்குறீங்க?"என்றதும் "ஒண்ணுமில்லை என் ப்ரண்ட் அவன் பேமிலியோட கோயம்புத்தூர்க்கு வந்திருக்கான்.அவன தான் எதிர்ப்பாக்குறேன்"என்றதும் கார் வந்து நின்றது .வேகமாய் கீழ வந்த மகேஷ் அருளை கட்டிபுடுச்சு மாடியில் இருந்த அபர்ணாவை காட்டியதும் ஒரு நிமிஷம் இருவரும் நிலைகுலைந்து போனார்கள் .இதுவரை கண்டது கனவா?இல்லை இது தான் கனவா?அபர்ணா கண்ணில் நீர் தேங்கியது.தன்னை வசீகரித்த உருவம் நண்பனிடம் போய் சேரப்போகிறது.கடைசியாக ஒரு முறை அபர்ணா உற்று கவனித்து உறுதி செய்து கொண்டான் .நிலைமையை உணர்ந்து அங்கிருந்து விலகி வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டு எல்லோர் முன்னிலையிலும் நடித்தான்.அவளும் கண் விலகாமல் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள் .நல்லபடியாய் பேச்சுவார்த்தை முடிந்து கலைந்து சென்றனர்.
ஊருக்கு கிளம்பும் போது கடைசியாக ரேஸ் கோர்ஸ் சாலையில் அந்த பலகையில் சாய்ந்து படுத்தான்.இதயம் கனமாகி போனது .இந்த கனம் வாழ்நாள் முழுவதும் இறக்கி வைக்க முடியாதது என்பதை உணரும் போது அவன் எதிரே மகேஷ் நின்றான் .அருளை பார்த்து "என்னாச்சு ஏன் இப்படி இருக்க?அழுதிருப்ப போல?மறுபடியும் கனவு வந்துச்சா?"என்றதும் அவனை கட்டிபுடுச்சு கதறியப்படி"ஸாரி மச்சான் .என் கனவுல வந்தது உனக்கு பாத்த பொண்ணு தான்டா.உன்கிட்ட மறைக்க முடியல.ஸாரிடா"என்றதும் "நிஜமாவா சொல்ற.நம்பவே முடியலையே "என்று சிரிச்சுகிட்டே "அவ உனக்கு தான் என்ஜாய்"என்றவன் அபர்ணா வீட்டில் பேசி கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்தான் .கல்யாணத்துக்கு ஒரு நாள் முன்னாடி ரேஸ் கோர்ஸ் பலகையில் அபர்ணாவுடன் அருள் இருக்கும்போது அருள் "ஏதாவது பேசுங்க அபர்ணா "என்றதும் அவனை தயக்கமின்றி இறுக்க கட்டி புடுச்சுட்டு "நீ மட்டும் கிடைக்கல வாழ்நாள் உயிர் இல்லாத மாதிரி வாழ்ந்திருப்பேன்"என்றபடி தன் கனவுகள் பற்றி சொல்ல அருள் தன்னோட கனவுகளை பற்றி சொல்ல இருவரும் அதிர்ந்து போனார்கள் .
[முற்றும் ]
நன்றிகள் !வணக்கங்களுடன் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக