சனி, 28 மார்ச், 2020

பல மருத்துவ குணங்களைக் கொண்ட லிச்சிப் பழத்தை சாப்பிடுவதால் வரும் நன்மைகள்

பல மருத்துவ குணங்களைக் கொண்ட லிச்சிப் பழத்தை சாப்பிடுவதால் வரும் நன்மைகள்


  • உலகிலேயே இதனுடைய இனத்தில் வேறு எந்த பழமும் இல்லாததால் இது ஒரு தனித்தன்மை வாய்ந்த ஒரு பழம். பலவிதமான நண்மைகளை உள்ளடக்கியது இந்த பழம் என்று சொல்வது மிகையல்ல. இதனடைய வாசம் பூவின் வாசத்தைப்போல் இருக்கும். இந்த தனித்தன்மை பெற்ற நறுமணத்திற்காகவே காக்டைல்களில் இதனை பயன்படுத்துவர். இந்த பழத்தை பறித்தவுடன் உண்ணும்போது இந்த மணம் அதிகம் கவரப்படும்.ஆசிய நாடுகளில் முதன் முதலில் இனிப்புகள் செய்வதில் பயன்படுத்தப்பட்டது.
  • பின்னர் மேற்கத்திய சந்தைகளில் விற்கப்பட்டு, பல நட்சத்திர உணவகங்களில் இதனை பயன்படுத்த தொடங்கினர். முற்காலத்தில் இது பணக்காரர்களில் பழமாக பார்க்கப்பட்டது. உடல் பருமன், புற்று நோயை தடுப்பது,நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, எலும்புகளை வலுவாக்குவது, செரிமானத்தை சரிசெய்வது,இரத்த அழுத்தத்தை குறைப்பது, வைரஸ் போன்றவற்றை எதிர்த்து போராடுவது, இரத்த ஓட்டத்தை சீராக்குவது போன்றவை இந்த பழத்தினால் உண்டாகும் நன்மைகளுக்கும் இதன் ஆரோக்கிய மற்றும் மருத்துவ குணங்களுக்காகவே இந்த பழம் உலகம் முழுவதிலும் காணப்படுகிறது.
  • பெரும்பாலும் உலர் லிச்சி பழங்களில் அதிகமான ஊட்டச்சத்துகள் உள்ளன. இதன் மணத்திற்காக பார்க்காமல் உலர் பலன்களை வாங்கி உண்ணும்போது அதிக நன்மைகளை அடையலாம்.லிச்சி பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. அதனால் மற்ற காய்கறி பழங்கள் போல, இதுவும் செரிமான ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. சிறந்த செரிமானத்தின் மூலம் குடல் இயக்கத்தை மென்மையாக்குகிறது.
  • குடலை தசைகளை மென்மையாக்கி வேகமான செரிமானத்திற்கு வழி வகுக்கிறது. மலச்சிக்கல் மற்றும் குடல் நோய்களை குறைக்கிறது .லீச்சியில் உள்ள ப்ரோ அந்தோசைடனின் பற்றி விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன, மேலும் அந்த ஆய்வுகள் அவற்றின் வைரஸ் எதிர்ப்பு சக்திகளை நிரூபிக்கின்றன. லிச்சீடன்னின்A2 என்னும் லிச்சியில் காணப்படும் ஒரு கலவை, ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் மற்றும் காக்ஸ்சாக்கி வைரஸ் உள்ளிட்ட வைரஸ்களின் பரவுதலை தடுக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக