வெள்ளி, 13 மார்ச், 2020

இந்தியாவில் நடந்த 10 விசித்திரமான திருமணங்கள்!

இந்தியாவில் நடந்த 10 விசித்திரமான திருமணங்கள்!


இந்தியாவில் ஐதீகம், ஜாதி, மதம், என்ற பல போர்வையில் பலவித ஆங்காங்கே பல விசித்திரமான திருமணங்கள் நடந்திருக்கின்றன. இன்றளவும் கூட இந்தியாவின் மூலைமுடுக்கில் ஆங்காங்கே சில பகுதிகளில் நாய்களுக்கும், தவளைகளுக்கும் திருமணம் செய்து வைக்கும் ஐதீகம் தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கின்றன. இதோ, அவற்றில் இணையங்களில் அதிகம் காணப்படும் சில விசித்திரமான திருமணங்களின் புகைப்படங்கள்…
தவளை திருமணம்!
தவளை திருமணம் அடிக்கடி செய்திகளில் படித்திருப்போம். இது, தவளை தம்பதிகளின் திருமண புகைப்படம்.
ஒரே கஷ்டமப்பா!
ஊருல பசங்க கல்யாணம் பண்ண பொண்ணு இல்லாம அல்லாடிட்டு இருக்காங்க. இவங்க நாய்க்கு பொண்ணு கூட கல்யாணம் பண்ணி வெச்சுட்டு இருக்காங்க.
மழை பெய்யுமாம்!
நாயுடன் திருமணம் செய்தால் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் இந்த நாய் திருமணம்!
மாடுகளுக்கு திருமணம்!
இந்தியாவின் பல பகுதிகளில் மாடுகளுக்கு திருமணம் செய்து வைத்தால் நல்லது என்ற ஐதீகம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ஓல்ட் இஸ் கோல்ட்!
தகப்பா இது உனக்கே நல்லா இருக்கா… வசனம் யாருக்கெல்லாம் ஞாபகம் வருகிறது?
இதுக்கெல்லாம் ஒரு தைரியம் வேண்டும்!
இந்த மாதிரி கலர் சட்டை போடுறதுக்கு எல்லாம் தகுதி வேணும் என்பது போல, இப்படி ஒரு உடையில் திருமணம் செய்வதற்கெல்லாம் நிஜமாகவே தைரியம் வேண்டும்!
இப்பவேவா!
கல்யாணம் பண்றதும், ஒருத்தன் மேல புல்டோசர் ஏத்துறதும் ஒண்ணுன்னு, கல்லூரி மாணவர்கள் கேலியாக கூறுவார்கள். ஆனால், கல்யாணம் ஆனவுடனேயே புல்டோசர் ஏற்றுவது என்ன நியாயம் மக்களே!
குழந்தை திருமணம்!
இன்றளவும் இந்தியாவில் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் குழந்தை திருமணம் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது.
இது தான் முடிவோ!
ஏற்கனவே பொண்ணுங்க எண்ணிக்கை குறைவு. ஒருவேளை இப்படியே போனா, கடைசியில இப்படி தான் பசங்க கல்யாணம் பண்ணிக்கணும் போல.
கொஞ்சம் கஷ்டம் தான்!
நமது வீடுகளில் திருமண ஆல்பங்கள் எடுத்து பார்த்தாலே இப்படி ஒரு படம் கண்ணில் மாட்டும். சிரிப்பதா, அழுவதா என தெரியாமல் ஒரு லுக் விடுவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக