காபி உலகிற்கு எப்படி அறிமுகம் ஆனது தெரியுமா ?
தலை வலி என்றால் ஒரு காபி சாப்டுங்க சரியாகிடும் என்று சொல்வார்கள். உடலுக்கு புத்துணர்வு தரகூடிய பானம் காபி.
இந்த காபி உலகிற்கு எப்படி அறிமுகம் ஆனது என்பது ஒரு சுவாரஸ்யமான கதை. இடையர்கள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த அந்த சமயத்தில் ஒரு செடியின் இலைகள் மற்றும் பழங்களை சாப்பிட்ட போது அந்த ஆடுகள் கும்மாளமும் கூத்தும் செய்தன. இதனை அறிந்த அந்த இடையர்கள் அது எந்த இலை எந்த பழம் என்று சோதனை செய்து பார்த்தார்கள். பிறகு அந்தச் செடியில் உள்ள பழத்தின் கொட்டைகளை ஆராய்ச்சி செய்தபோது அதில் ஒரு விதமான போதை தரக்கூடிய பொருள் ஒன்று இருந்துள்ளது. அதன் காரணத்தினாலேயே அந்த ஆடுகள் புத்துணர்ச்சி பெற்றதாக இருந்தது. அப்போதுதான் காபி உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டது.
காப்பி செடியிலிருந்து அந்தப் பழங்களை பிடுங்கி அதில் உள்ள கொட்டைகளை பதமான முறையில் வறுத்து எடுத்து அதில் இருந்து அரைத்த பின் கிடைக்கப் பெறுவது தான் காப்பித்தூள்.
இதைத்தான் இன்றைய மக்கள் உலகில் மூன்றாவது பானமாக அதிக அளவில் குடிக்க கூடியதாக இருக்கின்றது. நீங்களும் போய் ஒரு காபி குடிங்க. என்னுடைய அடுத்த பதிவில் சந்திக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக