சனி, 28 மார்ச், 2020

நட்சத்திர பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்...

நட்சத்திர பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்


நட்சத்திர பழம் இனிப்பு மற்றும் புளிப்பு சுவையானது. இதன் வடிவம் 5 முகப்புகளைக் கொண்ட நட்சத்திர வடிவில் காணப்படும். இது பார்ப்பதற்கு கண்ணை பறிக்கும் அழகான மஞ்சள் நிறத்தில் காணப்படும். இதை அப்படியே தோலுடனே சாப்பிடலாம். இதில் இரண்டு வகையான பழங்கள் உள்ளது. ஒன்று பார்ப்பதற்கு பெரிதாக இனிப்பு சுவை மற்றொன்று சிறியதாக புளிப்பு சுவை கொண்டது.
நட்சத்திர பழம் பாலிபினோலிக் செல்களில் ஏற்படும் மியூட்டோஜெனிக் விளைவை தடுத்து கல்லீரல் புற்று நோய் வராமல் தடுக்கும். மேலும் இதில் அதிகளவில் நார்ச்சத்து இருப்பதால் குடலை சுத்தப்படுத்தி குடல் புற்று நோய் வருவதையும் தடுக்கும். இதனால் நட்சத்திர பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
நட்சத்திர பழத்தில் அதிகளவில் பொட்டாசியம், சோடியம் உள்ளதால் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கும். இதனால் இதய நோய்கள் வராது. இதனால் நட்சத்திர பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் வராது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக