புதன், 4 மார்ச், 2020

உணவுச் சிந்தனை முத்துக்கள்


உணவுச் சிந்தனை முத்துக்கள்...

1). அழகு முகத்திற்கு நட்புணவு ஆரஞ்சும் ஆப்பிளும்.

2). கண்களின் நட்புணவு காரட்டும், கறிவேப்பிலையும்.

3). காலை காபி நரம்புகளுக்குக் கெடுதி

4). பளபள மேனிக்கு பப்பாளி

5). வெந்து கெட்டது முருங்கை - வேகாமல் கெட்டது அகத்தி.

6). ஈரெட்டு வயதை நீட்டிக்கும்  குமரி, நெல்லி.

7). சளி, இருமலை அதிகரிக்கும் மாட்டுப்பால்

8). உப்பும், வெள்ளை சர்க்கரை ஆரோக்கியத்தின் எதிரிகள்

9). உடல் உறுதிக்கு தேங்காய்ப்பால்

10). தங்கமேனிக்கு ஆவாரம்பூ

11). வயிற்றுக்கு மாதுளை, நெஞ்சுக்கு தூதுவளை

12). சமைத்த உணவு தவறான உணவு

13). மலச்சிக்கலுக்கு மாம்பழம், மாலைக்கண்ணை விரட்டும்.

14). ஆஸ்துமாவிற்கு எதிரி ஆரஞ்சும், அன்னாசியும்.

15). நாவல், நெல்லி கூட்டணி நீரிழிவை விரட்டிடும்.

16). பசிக்காத உணவு குப்பை உணவே.

17). பசிக்காமல் புசிப்பவன் மனிதன் மட்டுமே.

18). நோய்களின் தாய் சமைத்த அமில உணவுகளே

19). வசம்பு நமது மூலிகைத்தாய் -  கடுக்காய் நமது இரண்டாவது தாய்.

20). தரையில் தவழும் தலக்கீரைச் செடிகள் காலனை விரட்டும்.

21). நின்று கொண்டு நீர் அருந்தக் கூடாது.

22). அசையாத பருமன் உடலும் நெல்லியால் நடக்கும் - ஆப்பிளால் ஆடும் - பப்பாளியால் ஓடும்.

23). தக்காளியால் குண்டு அன்பர்கள் கட்டழகு பெறலாம்.

24). பாலும் சமைத்த கீரையும் நஞ்சு - தேனும் நெய்யும் சம அளவு நஞ்சு.

25). தேனும் முட்டையும் நஞ்சு - தேனும் சீனியும் சம அளவு நஞ்சு.

26). முள்ளங்கியும் உளுந்தும் நஞ்சு - மீனும் பாலும் நஞ்சு

27). மணத்தக்காளியும் மிளகும் நஞ்சு - தயிரும் வெங்கலப் பாத்திரமும் நஞ்சு

28). தொப்பைக்கு எதிரி தக்காளி, தர்பூசணி.

29). வயிற்றின் நட்புணவுகள் வெள்ளரியும் வெந்தயமும்.

30). முதுகு தண்டுக்கு முருங்கை, பப்பாளி.

31). அமிர்த உணவுகள் தேங்காய், மாதுளை.

32). நெல்லி, கறிவேப்பிலை, முருங்கை, வெந்தயம் உண்பவர்கள் தனக்குத்தானே மருத்துவர்.

33). வாரம் ஒருநாள் இயற்கைச்சாறுகள், மாதம் இரண்டு நாட்கள் நோன்பு - உங்கள் ஆயுளை பத்து வருடம் நீடிக்கும்.

34). அளவுக்கு மீறினால் உணவே நஞ்சு.

35). தினசரி ஒரு பிடி கரிசாலை நரை திரை மாறும்

36). தோல் வியாதிகளுக்கு நண்பன் கத்தரிக்காய்.

37). இரத்த விருத்திக்கு செம்பருத்தி - மூட்டுவலிக்கு முடக்கற்றான்.

38). குடற்புழுக்களுக்கு வேப்பங்கொழுந்து - சளிக்கு கற்பூரவல்லி.

39). கொழும்புக்கு எதிரி வெங்காயம், இஞ்சி, பூண்டு.

40). இரத்த அழுத்தத்திற்கு மிளகு, வெந்தயம்.

41). கல்லடைப்புக்கு வாழைத்தண்டு - வரட்டு இருமலுக்கு உலர்ந்த திராட்சை.

42). நினைவாற்றலுக்கு வல்லாரை - சித்தம் தெளிவிற்கு மஹா வில்வம்

43). மூளைக்கு வாழைப்பழம், வல்லாரை, பேரீட்சை, உலர் திராட்சை மற்றும் வெண்டைக்காய்.

44). பைத்தியம் தெளிய வெண்பூசணி, பேய்ச்சுரக்காய்

45). வெட்டுக்காயத்திற்கு வசம்பு, தேன்.

46). புற்றுநோயை தடுக்கும் மஞ்சள், வெண்பூசணி, சீத்தாப்பழம், கோதுமைப்புல் சாறு

47). மூலநோய்க்கு அத்திக்காய், கருணைக்கிழங்கு

48). தலைப்பேனுக்கு மலைவேம்பு - உடல் காய்ச்சலுக்கு நிலவேம்பு.

49). தாய்ப்பால் பெருக பூண்டு, வெந்தயம், முருங்கை

50). சொரி, சிரங்குக்கு வேப்பிலை, மஞ்சள், குப்பைமேனி.

51). குஷ்ட நோய்க்கு வேப்பம்பிசின் - புற்றுநோய்க்கு வேப்பிலை.

52). வயிற்று புண்ணுக்கு மணத்தக்காளி - பல்வலிக்கு பப்பாளி

53). சுகப்பிரசவத்திற்கு குங்குமப்பூ, தேன், பிரண்டை

54). சர்க்கரை ரோய்க்கு பாகற்காய்- சிறுநீரகத்துக்கு சிறுகீரை

55). சிற்றின்பத்துக்கு சிறுபசலை - தாது விருத்திக்கு முருங்கை

56). குடற்புழுக்களுக்கு பாகற்காய், வேப்பிலை, சுண்டைக்காய், கடுக்காய்.

57). பித்த வெடிப்புக்கு வேப்பெண்ணெய் + மஞ்சள், விளக்கெண்ணெய் + சுண்ணாம்பு

58). நெஞ்சு சளிக்கு சுண்டைக்காய் - நரைமுடிக்கு தாமரைப்பூ

59). வயிற்று கடுப்புக்கு கேழ்வரகு மாவு + சர்க்கரை

60). உடல் அசதிக்கு கோதுமை மாவுக் கஞ்சி

61). பிள்ளை பெற்றவளுக்கு அரைகீரை - உட்புண்களுக்கு கடுக்காய்

62). வாய்ப்புண்ணுக்கு கொய்யா இலை - வயிற்றுப்புண்ணுக்கு மணத்தக்காளி இலை

63). திக்குவாய்க்கு வில்வம் - நாக்குப் புண்ணுக்கு பப்பாளிப்பால்

64). குதிகால் வலிக்கு  எருக்கு - இரத்த விருத்திக்கு அருகு

65). சளிக்கு துளசி - பித்தத்திற்கு வில்வம்

66). மஞ்சள் காமாலைக்கு கீழாநெல்லி - நரம்புகளுக்கு வல்லாரை

67). புரையோடிய புண்ணுக்கு அத்திப்பால், கருவேலங் கொழுந்து

68). அகத்தின் தீயை அணைக்கும் அகத்தி

69). சர்க்கரை நோய்க்கு ஆவாரம்பூ, பாகற்காய்

70). விஷப் பூச்சி, ஜந்துக்களின் விஷமுறிவுக்கு சிறியா நங்கை.

1 கருத்து:

  1. As claimed by Stanford Medical, It is in fact the ONLY reason women in this country get to live 10 years longer and weigh on average 19 kilos less than us.

    (By the way, it really has NOTHING to do with genetics or some secret diet and EVERYTHING to do with "HOW" they are eating.)

    P.S, I said "HOW", not "what"...

    CLICK this link to determine if this quick quiz can help you find out your real weight loss potential

    பதிலளிநீக்கு