புதன், 11 மார்ச், 2020

கரோனா வைரஸ் இன் அறிகுறிகளும், அதை பற்றி சில விஷயங்களும்...

கரோனா வைரஸ் இன் அறிகுறிகளும், அதை பற்றி சில விஷயங்களும்


சீனாவில் உருவாகிய கரோனா வைரஸ் இன்று உலக அளவில் பரவி அனைவரையும் அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது. இன்று வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பிய மக்களால் நம் நாட்டிற்குள்ளும் அந்த வைரஸ் அடி எடுத்து வைத்து விட்டது.
இந்த வைரஸை நினைத்து யாரும் பீதி அடைய தேவையில்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். நாம் சில முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொண்டாலே போதும், கரோனா நம்மை அண்டவே அண்டாது.இதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன என்றால் கைகளை அடிக்கடி சோப்பு அல்லது ஹேண்ட் வாஷ் போட்டு கழுவ வேண்டும். தும்மல், இருமல் இருப்பவர்கள் தும்மிய பின்னும், இருமிய பின்னும் கைகளை கழுவ வேண்டும்.
சாப்பாடு தயாரிக்கும் முன்பு, வெளியே சென்று விட்டு வந்த பிறகு, உடல் நலம் குறைந்தவர்களுக்கு சேவை செய்த பின், பிராணிகளுடன் விளையாடிய பின், கழிவறையை பயன்படுத்திய பின் என்று ஒவ்வொரு முறையும் கைகளை நன்றாக கழுவினாலே இந்த வைரஸ் தொற்று தாக்காது. இதன் அறிகுறிகள் என்னவென்றால், காய்ச்சல், தலைவலி, இருமல், வறண்ட தொண்டை, சிறுநீரக செயலிழப்பு, நெஞ்சு வலி, நிமோனியா ஆகியவையே.
கரோனா வைரஸ் இன் நோயரும்பு காலம் 1 - 14 நாட்கள் வரையும், அதற்கு மேலும். கரோனாவால் சீனாவை அடுத்த பாதித்த நாடு ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, அமெரிக்கா, தாய்லாந்த், ஓமன், துபாய், பிலிப்பைன்ஸ் ஆகும்.80 வயதிற்கு அதிகம் உள்ளவர்கள் தான் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு காரணமாக உயிரை இழக்க நேரிடுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக