அன்னாச்சி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்...
அன்னாச்சி பழத்தில் வைட்டமின் ஏ,வைட்டமின் சி,பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன.அன்னாச்சி பழத்தில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.அன்னாச்சி பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.அன்னாச்சி பழத்தில் கால்சியம் இருப்பதால் எலும்புகளை வலிமையாக்கும்.
அன்னாச்சி பழத்தில் நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாது.மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் அன்னாச்சிபழம் சாப்பிடலாம்.மேலும் உடல் எடை அதிகம் உள்ளவர்கள் அன்னாசி பழம் சாப்பிட்டு வந்தால் உடல் எடையும் குறையும்.
அன்னாச்சி பழத்தில் பொட்டாசியம் சத்து உள்ளதால் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அன்னாசி பழத்தை சாப்பிட்டு வரலாம்.அன்னாச்சி பழத்தில் அதிக அளவில் வைட்டமின் ஏ உள்ளதால் கண்களில் பார்வை குறைபாடு ஏற்படாது,தினமும் அன்னாச்சி பழம் சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படாது.
அன்னாச்சி பழத்தில் ப்ரோமெலைன் உள்ளதால் மூட்டுகளில் ஏற்படும் தேய்மானம் மற்றும் வலியை நீக்கும்.இதனால் அண்ணாச்சி பழத்தை சாப்பிட்டு வரலாம்.மேலும் அண்ணாச்சி பழம் சாப்பிடுவதால் உடலில் காயங்கள் இருந்தால் விரைவில் ஆறிவிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக