ஸ்ட்ராபெரி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்...
ஸ்ட்ராபெரி பழத்தில் வைட்டமின் ஏ, தையமின்,ரிபோபேளேவின்,நியாசின்,பேன்டோதெனிக் அமிலம்,வைட்டமின் சி, போலிக் அமிலம்,வைட்டமின் கே, செம்பு,அயோடின்,மெக்னிசியம் ஆகிய சத்துக்கள் உள்ளன.ஸ்ட்ராபெரி பழத்தில் பிலவனாய்டு இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

ஸ்ட்ராபெரி பழத்தை சாப்பிடுவதால் புற்றுநோய்,சர்க்கரை நோய் ஆகிய நோய் வராமல் தடுக்கும்.இதனால் ஸ்ட்ராபெரி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.ஸ்ட்ராபெர்ரி பழத்திற்கு ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. மேலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளதால் செல்களின் அழிவை தடுக்கும் ஆற்றலையும் பெற்றுள்ளது.

ஸ்ட்ராபெரி பழத்தை சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்கும்.மேலும் மாரடைப்பு வராமல் தடுக்கும்.இதனால் தொடர்ந்து ஸ்ட்ராபெர்ரி பழத்தை சாப்பிட்டு வரலாம். ஸ்ட்ராபெர்ரி பழத்தை சாலட் செய்து சாப்பிடலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக