நாவற் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்...
நாவற் பழத்தில் புரோட்டீன்,கால்சியம்,மெக்னீசியம்,வைட்டமின் சி,வைட்டமின் பி,பிரக்டோஸ், குளுக்கோஸ் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன.நாவற்பழம் ஒரு ஆன்டிபயாடிக் உள்ள பழம். நாவற்பழம் ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.மேலும் சர்க்கரை நோய் வராமல் பாதுகாக்கிறது.சர்க்கரை நோய் உள்ளவர்கள் நாவற் பழத்தை சாப்பிட்டு வரலாம்.இதனால் சர்க்கரையின் அளவு சமநிலையில் இருக்கும்.
நாவற் பழம் சாப்பிட்டு வந்தால்,புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.தினமும் நாவல் பழம் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் ஏற்படாது.நாவற் பழத்தில் வைட்டமின் சத்துக்கள் உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் நாவல் பழத்தை சாப்பிட்டு வரலாம்.
நாவற் பழத்தில் மெக்னீசியம் மற்றும் கால்சியம் உள்ளதால்,எலும்புகளின் வலிமைக்கு நல்லது. நாவல் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் பலப்படும்.நாவற் பழத்தில் வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளதால் உடலில் உள்ள ரத்த உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. இதனால் ரத்தசோகை ஏற்படாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக