பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்...
பேரிச்சம்பழத்தில் உள்ள பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் அதிக அளவில் உள்ளன. இதனால் பேரிச்சைபழம் சாப்பிட்டு வந்தால் எலும்புகளின் தேய்மானம் குறைகின்றது. தினமும் பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் மூட்டு தேய்மானம் வராமல் இருக்கும்.

பேரிச்சம்பழத்தில் இரும்புச் சத்து அதிக அளவில் உள்ளது. இதனால் தினம்தோறும் பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். கர்ப்பிணி பெண்கள் பேரிச்சம்பழத்தை தினம்தோறும் சாப்பிடவேண்டும். இதனால் வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.

பேரிச்சம்பழத்தை சாப்பிடுவதால் கண்களில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும்.தினந்தோறும் பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் கண்களின் பார்வை திறன் மேம்படும். கண் புரை நோய் வராமல் காக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக