வெள்ளி, 13 மார்ச், 2020

“8” வடிவ நடைபயிற்சியும் அதனால் கிடைக்கும் நன்மைகளும்

“8” வடிவ நடைபயிற்சியும் அதனால் கிடைக்கும் நன்மைகளும்


நடைபயிற்சி என்பதே உடலுக்கு சிறந்த பயிற்சி. தினமும் 45 நிமிடம் நடைபயிற்சி செய்வதால் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழலாம். அதிலும் “8” வடிவில் நடைபயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் பல.
8” வடிவில் நடைபயிற்சியை தினமும் இருமுறை செய்ய வேண்டும். குறைந்தது 15 அடிநீளத்தில் எட்டு போடுகின்ற வடிவத்தில் 30 நிமிடம் நடக்க வேண்டும். முதல் 15 நிமிடம் தெற்கிலிருந்து வடக்காக நடந்தால் அடுத்த 15 நிமிடம் வடக்கிலிருந்து தெற்காக நடக்க வேண்டும்.
 இந்த நடைபயிற்சி செய்வதால் ரத்த ஓட்டம் சமன்படுத்தப்படுகின்றது. நீரழிவு நோய் படிபடியாக குறைந்து முற்றிலுமாக குணமாக வாய்ப்பு உள்ளது. தலைவலி , மலச்சிக்கல் போன்றவை தீரும் அதோடு கண்பார்வை மற்றும் கேட்கும் திறன் அதிகரிப்பதோடு குடல் இறக்க நோய்கள் வருவதை தடுக்கின்றது. பாதவலி , மூட்டு வலி குறையும் , சுவாசம் சீராகி உள் உறுப்புகள் பலம் பெறும். உடல் சக்தியை பெருக்கும் ஆதார சக்கரங்களின் செயல்பாட்டை சமன் செய்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக