செவ்வாய், 31 மார்ச், 2020

பெண்கள் ஹீமோகுளோபின் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் எவை??

பெண்கள் ஹீமோகுளோபின் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் எவை??


ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு சீராக இருக்க வேண்டியது அவசியமாகும். ஹீமோகுளோபின் அளவு குறையும் பொழுது தலைவலி சீரற்ற இதய துடிப்பு மூச்சடைப்பு மயக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். ரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைவது இரும்பு சாது குறைவது போன்றவற்றால் ஹீமோகுளோபின் அளவு குறைகின்றது. வைட்டமின் சி பற்றகுறை இருந்தாலும் ஹீமோகுளோபின் அளவு குறையும். 
மாதவிடாய் மற்றும் கர்ப்ப காலங்களில் பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு குறையும். போலிக் அசிட் குறைபாடு இருந்தாலும் ஹீமோகுளோபின் அளவு குறையும். ஹீமோகுளோபின் அளவு சீராக இருப்பதற்கு நமது சத்தான உணவுகளை சாப்பிட்டாலோ போதுமானது. முருங்கைக்கீரை சுண்டக்காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. கொண்டைக்கடலை மற்றும் பச்சை பயிறு முளைகட்டி சாப்பிடலாம். சுண்டவத்தல் குழம்பு வயிற்றில் உள்ள பூச்சிகளை கொள்ளும் எள்ளலுருண்டை சாப்பிடுவது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.
திராட்சை மற்றும் மாதுளை போன்ற பழங்களை சாப்பிட வேண்டும். கருவேப்பிலை துவையல் பொன்னாங்கண்ண கீரை நெல்லிக்காய் போன்றவை நல்லது. எலும்பு சூப் போன்றவற்றை சாப்பிடலாம். இந்த உணவு வகைகளை சாப்பிடுவதால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக