சனி, 28 மார்ச், 2020

திருநீற்று பச்சிலையின் (உருத்திர சடை, விபூதி பச்சிலை) மருத்துவ குணங்களைக் காண்போம்

திருநீற்று பச்சிலையின் (உருத்திர சடை, விபூதி பச்சிலை) மருத்துவ குணங்களைக் காண்போம்


திருநீற்றுப்பச்சிலையை அரைத்து சிறு உருண்டை அளவு உட்கொண்டு வர கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் உண்டாகும்.
அரிசியில் திருநீற்றுப்பச்சிலையை கலந்து சாதம் வடித்து 8 மணி நேரம் கழித்து சாப்பிடவும், இதனை தொடர்ந்து செய்து வந்தால் 4 நாட்களில் உடல் சூடு தணியும்.
திருநீற்றுப்பச்சிலையை பிட்டவியல் போன்று செய்து சாறு பிழிந்து, அதில் மிளகு, லவங்கப்பொடி சேர்த்து உட்கொள்ள நாவறட்சி தீரும்.
திருநீற்றுப்பச்சிலையை அரைத்து முகத்தில் பூசி உலர்ந்த பின் கழுவி வர முகத்தில் உள்ள மாசுமருக்கள் நீங்கி முகம் பிரகாசமடையும்.
திருநீற்றுப்பச்சிலை விதையை நீரில் ஊறவைத்து சர்க்கரை சேர்த்து உட்கொண்டு வர சுரம், கபம், வாந்தி ஆகியவற்றை குணமாக்கும்.
திருநீற்றுப்பச்சிலையை.நுகர்ந்து வருவதால், தலைவலி, தூக்கமின்மை குணமாகும்.
திருநீற்றுப்பச்சிலை உடன் வேப்பிலை, பெருங்காயம் சேர்த்து அரைத்து பாலுண்ணி மீது தடவி வர குணம் கிடைக்கும்.
திருநீற்றுப்பச்சிலை உடன் மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வர முகப்பரு, கரும் புள்ளிகள் நீங்கி முகம் மிருதுவடையும்.
திருநீற்றுப்பச்சிலையை லேசான தீயில் வாட்டி சாறு பிழிந்து காதில் விட காது வலி குணமாகும்.
திருநீற்றுப்பச்சிலை சாறு, தும்பை சாறு கலந்து சிறிது பச்சை கற்பூரம் சேர்த்து மூக்கில் உறிஞ்ச தலைவலி, தலைபாரம் தீரும்.
திருநீற்றுப்பச்சிலை சாற்றுடன் கற்பூரவல்லி சாறு சேர்த்து மேலே பூசி வர கருந்தேமல், தடிப்பு, அரிப்பு ஆகியவை குணமாகும்.
திருநீற்றுப்பச்சிலை அரைத்து பாலில் கலந்து குடித்து வர புத்தி கூர்மை உண்டாகும். வாந்தியை நிறுத்தும்.
# நம் நாட்டு மூலிகைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக