பொழுதுபோக்கு என்று மட்டும் நினைக்கும் இசையின் இணையில்லாத பயன்கள்.
இசை பிடிக்காதவர்கள் என்று எவரும் கிடையாது. வாழ்க்கையில் ஏதேனும் சூழ்நிலையில் இசையானது நம்மை ஈர்த்துக் கொண்டிருக்கின்றது. மகிழ்ச்சி , கவலை போன்ற எந்தவகை உணர்வாகினும் இசையானது அந்த உணர்வுடன் கலந்து விடுகின்றது. சோகம், மனசிதைவு , கோபம் , வெறுப்பு போன்ற எண்ணங்களில் இருந்து நம்மை மாற்றி நல்ல ஒரு நிம்மதியான மனசூழலை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. எதிர்மறை எண்ணங்களை குறைத்து அதிலிருந்து வெளிவர உதவுகின்றது. மகிழ்ச்சி , உற்சாகம் போன்ற நேர்மறை எண்ணங்களை அதிகப்படுத்துகின்றன. இது இசைக்கு மட்டுமே இருக்கும் சிறப்பு.
ஒவ்வொரு வகையான இசையும் ஒரு வகை நரம்பியல் தூண்டல்களை ஏற்படுத்துகின்றன. தொடர்ந்து இசையை கேட்டுக் கொண்டிருக்கும் போது மூளையிலுள்ள நியோகார்டெக்ஸ் செயல்பட வைக்கின்றது. இது மனிதனை அமைதி நிலைக்கு போக வைக்கின்றது. திடீரென்று உணர்ச்சி வசப்படுவதையும் குறைக்கின்றது.
.
மன அழுத்ததினால் பாதிக்கப்பட்டவர்கள் பசியின்மை மற்றும் தூக்கமின்மை போன்றவைக்கும் ஆள்ளாகின்றன. இசைசிகிச்சை முறையின் மூலம் தங்கள் உணர்ச்சி மற்றும் மன அழுத்தத்திலிருந்து வெளியே வர பலருக்கும் உதவியாக இருகின்றது. இசை சிகிச்சை என்பது அதிக இசை முறைகளையும் உபகரணங்களையும் , மற்றும் குரல் ஒலியைக் கொண்டுள்ளது. இது பல படிநிலைகளில் சிகிச்சையை ஊக்கப்படுத்துகின்றது. பேசு சிகிச்சையை விட இசை சிகிச்சையானது சிறந்ததாக சிகிச்சையாளர்கள் கூறுகின்றன. இசையோடும் இயற்கையோடும் இணைந்த சூழலானது மனநிலை தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பதோடு மன அமைதியையும் கொடுக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக