செவ்வாய், 31 மார்ச், 2020

ரத்தப் புற்று நோய் பற்றி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!!

ரத்தப் புற்று நோய் பற்றி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!!


  • ரத்தப் புற்று நோய் ரத்த செல்களில் புற்று நோய் செல்கள் உருவாகி அவை இரு மடங்கு பெருகுவதால் உண்டாகிறது. எலும்பு மஜ்ஜையில் உற்பத்தியாகும் ரத்த செல்களில் மரபணு மாற்றம் உண்டாகி அவை புற்று நோய் செல்களாக மாறி இரட்டிப்பாகிறது. இதுவே ரத்தப் புற்று நோயாகும்.
  • ரத்த செல்களில் ஹீமோகுளோபினால் சிவப்பு நிறம் உண்டாகிறது. அசாதரண வளர்ச்சி கொண்ட புற்று செல்களுக்கு ஹீமோகுளோபின் அமைப்பு மாறுபடும். இதனால் வெளிர் நிறம் வரும்.
  • தொடர்ச்சியாக வேலை செய்ய இயலாது. தலை சுற்றும். உடல் மிகவும் சோர்வடையும்.
  • உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கு மிக முக்கியமானது ரத்த செல்களான வெள்ளையணுக்கள். லுகீமியா நோயால் வெள்ளையணுக்கள் உற்பத்தியாகாது. இதனால் தொடர்ச்சியாக நோய் வாய்படுவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக