உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் பழங்கள் இதோ!!
ஆரஞ்சு: இனிப்பான மருந்து. ஒரு நாளைக்கு 2-4 ஆரஞ்சு எடுப்பது ஜலதோஷத்தை விலக்கும். கொழுப்பைக் குறைக்க உதவும்.மேலும் சிறுநீரகக் கற்களைக் கரைப்பதோடு, கற்கள் வராமலும் தடுக்கும். அதனுடன் பெருங்குடல் புற்றுநோயின் ஆபத்தினைக் குறைக்கிறது.
தர்பூசணி: மிகவும் குளிர்ச்சியான ஒரு தாகம் தீர்ப்பான். 92% தண்ணீர்ச் சத்துக்களையுடையது. மேலும் இந்தப் பழத்தில் மாபெரும் அளவில் Glutathione இருப்பதால், அது நம் உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. தர்ப்பூசணியில் உள்ள மற்ற சத்துக்கள் விட்டமின் -சி, பொட்டாசியம் ஆகியவை.
கொய்யா & பப்பாளி: இவை இரண்டுமே விட்டமின் சி நிறைந்தது. உயர் விட்டமின்சி கொண்ட பழங்களைத் தேர்வு செய்தால் சந்தேகத்துக்கிடமின்றி வெற்றி பெறும் தகுதியுடையவை. கொய்யாப்பழம் நார்ச்சத்து அபரிமிதமாக உள்ளதால், மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது. பப்பாளிப்பழத்தில் சத்துக்கள் நிறைந்துள்ளதால் கண்களுக்கு மிகவும் நல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக