செவ்வாய், 31 மார்ச், 2020

நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள்…..

நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள்…..


1.சிட்ரஸ் பழங்கள் உடல் ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு தன்மையையும் மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பவை. அவற்றுள் ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி அதிகம் நிரம்பியிருக்கிறது. அவை ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, நோய் தொற்றுவில் இருந்தும் உடலை பாதுகாக்கும். அத்துடன் காய்ச்சல் போன்ற உடல்நல பாதிப்பில் இருந்தும் காக்கும். 
2.எலுமிச்சை பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் செயல்பாடுகளை ஊக்குவித்து உடல் வெப்ப நிலையை சீராக பராமரிக்க உதவுகிறது. எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து தண்ணீர், சூப்கள், சாலட்டுகளில் கலந்து சாப்பிடலாம்.
3. பேரீச்சம் பழத்தில் இரும்பு சத்து அதிகம் இருக்கிறது. அதனை தேனுடன் கலந்து சாப்பிட்டு வரலாம். தொடர்ந்து சாப்பிட்டு வருவது உடலுக்கு சக்தியை தரும். நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும். 
4.மஞ்சள், சோம்பு, பூண்டு போன்றவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் தன்மை கொண்டவை. அதனை அன்றாட உணவில் பயன்படுத்தி வருவது நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும்.
5.பீன்ஸ், சிப்பி வகை மீன்கள் போன்றவற்றில் துத்தநாக சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. பொதுவாகவே உடலில் துத்தநாக பற்றாக்குறை ஏற்பட்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உடல் பலகீனமாகிவிடும். ஆதலால் துத்தநாக சத்துக்கள் கொண்ட உணவுகளை அவசியம் சாப்பிட்டு வர வேண்டும்.

6. கீரை வகைகளில் தாதுக்கள், வைட்டமின்கள், இரும்பு சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. அவை நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதோடு பலவகையான நோய்கள் வராமல் தற்காத்துக்கொள்ளவும் உதவிபுரிகின்றன.
7.தயிர் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் செயல்பாட்டுக்கு உறுதுணையாக இருக்கின்றன. மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக