செவ்வாய், 31 மார்ச், 2020

பிரசவத்திற்கு முன் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்…

பிரசவத்திற்கு முன் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்…


எவ்வளவு தான் அவர்கள் கர்ப்ப காலத்தில் ஆயிரம் வலிகளை கடந்தாலும்…குழந்தையை தன் கைகளால் தாங்கும் ஒரு நிமிடம், அந்த வலிகள் அனைத்தும் விழிகளில் இருந்து மறைந்து குழந்தையை நன்றாக வளர்க்க வேண்டுமென்னும் ஆசையை மட்டுமே அடையும். இருப்பினும் கர்ப்ப காலத்தில், அவர்கள் படும் வேதனையையும் வலியையும் பற்றி கண்டிப்பாக சொல்லி தான் ஆக வேண்டும்.
இந்த ஆர்டிக்கலின் மூலமாக, புதிதாக குழந்தை பெற்றெடுக்கும் பெண்களின் மனதில் இருக்கும்… லேபர் பற்றின கேள்விகளுக்கான வினோதமான பதிலை தர நாங்கள் முன் வந்துள்ளோம்.
ஒரு புதிய தாயாக நீங்கள் பெறும் அனுபவங்களை கனிசமாக வேறுபடுத்தலாம் என்பதனை கவனத்தில் கொள்ளுங்கள். இந்த பதில்களும் பவளத்தினை போன்ற விலைமதிப்பற்றதாகவே படிப்பவர்களுக்கு இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம். மேலும் சில தகவல்களை நாம் இப்பொழுது கீழே பார்க்கலாம்.
#1 புதிதாக கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு லேபர் ஆரம்பிப்பது எப்படி தெரியும்? இதற்கான பதில் மிக சுலபமான ஒன்றல்ல.
#2 லேபர், இரண்டு நிலைகளாக பிரிக்கப்படுகிறது என்பதனை நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அவை ப்ரீ-லேபர் மற்றும் ஆக்டிவ் லேபர் எனப்படும். இந்த இரண்டு முறைகளும் எவ்வாறு தொடங்கும் என்பதனை விவரிப்பது கடினமாகும். மேலும், இந்த இரண்டு நிலைகளும் ஒவ்வொரு பெண்ணுக்கு மாறவும் செய்கிறது.
#3 சில பெண்களுக்கு இவை வேகமாக நடக்கும். சிலருக்கோ…இந்த லேபர் பருவம் என்பது நீண்டதோர் உணர்வினை தருகிறது. இந்த பிரசவிக்கும் காலத்தின் முதலில் ஒரு வாரத்திற்கு அதற்கான அறிகுறிகள் ஒரு பெண்ணுக்கு தோன்றுகிறது. அவ்வாறு முதல் முதலில் கர்ப்பமாக இருக்கும் பெண்ணிற்கு ஏற்படும் சில அறிகுறிகளை நாம் இப்பொழுது பார்க்கலாம். பின்முதுகின் கீழ்த்தண்டில் வலி ஏற்படுவதனை ஒரு பெண்ணால் உணர முடியும். ஆம், அந்த பெண்ணுக்கு ஏற்படும் வலி என்பது… மாதவிடாய் சுழற்சி காலத்தில் ஏற்படும் ஒரு வலியை போன்றதாகவே இருக்கிறது. வழக்கமான இடைவெளியில் சுருக்கங்கள் வருகிறது.
மேலும் அது நீண்டதாகவும் வலிமையானதாகவும் இருக்கிறது. நீங்கள் வலியை உணரும் முன்னே உங்கள் சவ்வுகளில் சிதைவுகள் ஏற்படலாம். எப்பொழுது நாம் டாக்டரை பார்க்க வேண்டும்? உங்கள் உணர்ச்சிகளில் எதாவது சிரமம் தெரிந்தால், எந்த நேரத்திலும் நீங்கள் டாக்டரை அழைப்பது நன்றாகும். அத்துடன் மேலே குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகள் அனைத்தும், உங்கள் குழந்தைகளின் பிறப்பிற்கான சிறந்த அறிகுறியாகவும் அமைகிறது. மேலும், உங்கள் வயிற்றில் உள்ள குழந்தை, மெதுவாக நகர்ந்தாலோ..இல்லை என்றால், உங்களுக்கு கண் பிரச்சனை, காய்ச்சல், மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகள் இருந்தாலோ, கண்டிப்பாக நீங்கள் டாக்டரை உடனடியாக பார்ப்பது நன்மை பயக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக