இல்லற வாழ்க்கையை பற்றி சுவாரஷ்யமான சில தகவல்கள்
இல்லற வாழ்க்கையை பற்றி சுவாரஷ்யமான சில தகவல்கள்
செக்ஸுன்னா, ஏன்யா இப்படி அலையுறீங்க”, அப்படீன்னு யாராவது கேட்டா, சுத்தமா யோசிக்காமகூட, “ஏன்னா, அதுல ஒருவிதமான சுகம், கிளர்ச்சி, இன்பம் இப்படி நெறைய இருக்குங்கிறதுனாலதான்”ன்னு எல்லாரும் கோரசா கத்திச் சொல்லனும்னாவது நெனைப்பாங்க அப்படீங்கிறதுதான் நிதர்சன உண்மை?!
- சொல்வாங்களா மாட்டாங்களாங்கிறது ஆளைப் பொறுத்தது!ஆமா, ஏன் செக்ஸ் விவரங்கள், படங்கள், காணொளிகள், கிசுகிசுக்கள்னு இப்படி எதுவா இருந்தாலும் ‘தீ’ மாதிரி, அப்படியே பத்திக்கிட்டு எரியுது நம்ம (மனித) சமுதாயத்துல மட்டும்?! இதுக்கு ஒரு முக்கிய காரணம், செக்ஸ் பற்றிய செய்திகள (முண்டியடிச்சிக்கிட்டு) முதல் பக்கத்துலயோ, பிரத்தியேகமாகவோ பிரசுரிக்கிற நம்ம ஊடகங்கள்தான்னு சொல்லனும்!
- “செக்ஸுங்கிறது ஒரு வகையான பசி! தினமும் மனிதனுக்கு ஏற்படுற உணவுப்பசி மாதிரி, ‘செக்ஸுங்கிறது’ ஒரு உடல் பசி” அப்படீன்னு நம்ம பத்திரிக்கை ஊடகத்துலதான், சில வருடங்களுக்கு முன்பு ஒரு மருத்துவர்/நடிகையோட பேட்டியில படிச்சதா நியாபகம்! உண்மைதான், செக்ஸ் ஒரு பசிதான். ஆனா, நம்ம சமுதாயத்துல அது வெறும் பசியா மட்டுமே பார்க்கப்பட்டிருந்தா, செக்ஸ் பத்தின ஒரு அதீத ஆர்வம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு மிக மிக குறைவுங்கிறது என்னோட புரிதல்!
- “ஏய்….என்னப்பா இது இழுவ! சீக்கிரம் மேட்டருக்கு வாப்பா”ன்னு நீங்க சவுண்டு விடுறதுக்கு முன்னாடி நான் பதிவுச் செய்திக்கு வந்துடறேன். செக்ஸ் பத்தின ஒரு அதீத ஆர்வம் மக்களுக்கு இருக்க ஒரு முக்கிய காரணம், அதுல இருக்குற பல சுவாரசியங்கள், புதுசு புதுசா வெளிவருகிற/நமக்குத் தெரியாத பல செய்திகளே. அப்படிப்பட்ட 10 சுவாரசியமான, செக்ஸ் குறித்த ஆய்வுகளைப் பத்தித்தான் நீங்க இப்போ படிக்க போறீங்க…..செக்ஸுக்கு வயதில்லை! பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, 75 முதல் 85 வயதானவர்கள், மாதத்துக்கு இரு முறை உடலுறவு வைத்துக்கொள்கிறார்கள் என்கிறது 2007 ஆம் ஆண்டில் New England Journal of Medicine என்னும் மருத்துவ வார இதழில் வெளிவந்த ஒரு ஆய்வறிக்கை! பொதுவான நம்பிக்கை என்னன்னு கேட்டீங்கன்னா, இளம் வயதினரே அதிகம் உடலுறவில் ஈடுபடுகிறார்கள் என்பதே?!
- செக்ஸ் ஆயுட்காலத்தில் ஆண்களுக்கே முதலிடம்! பெண்களுடன் ஒப்பிடும்போது, குறைந்த ஆயுட்காலம்/வாழ்நாளை கொண்ட ஆண்கள், செக்ஸ் வாழ்க்கையை எடுத்துக்கொண்டால்தலைகீழாக இருக்கிறார்கள்! அதாவது, 55 வயதில் உள்ள ஒரு ஆணையும் பெண்ணையும் எடுத்துக்கொண்டால், செக்ஸ் வாழ்க்கை/ஈடுபாடு ஆண்களுக்கு மேலும் 15 வருடங்களுக்கு இருக்கிறதாம்! ஆனால் பெண்களுக்கோ 10 வருடங்கள்தானாம்! (இது அமெரிக்கர்களில் நடத்தப்பட்ட ஆய்வு என்பதை நினைவில் கொள்க)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக