வியாழன், 26 மார்ச், 2020

கங்கைகொண்ட சோழபுரத்தை பற்றி அறிந்திடாத தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள்....

கங்கைகொண்ட சோழபுரத்தை பற்றி அறிந்திடாத தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள்....


கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயில்
இந்தியாவின் தமிழ்நாட்டில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோவில் ஆகும். இது கங்கை கொண்ட சோழபுரம் என்ற ஊரில் முதலாம் இராசேந்திர சோழனால் கட்டப்பட்டது.கங்கை ஆறு வரை படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றதன் நினைவாக கங்கை கொண்ட சோழபுரம் என்ற நகரத்தை முதலாம் இராசேந்திரன் அமைத்து அங்கு இக்கோவிலையும் கட்டினான். இக்கோவில், ஐராவதேஸ்வரர் கோயில், பெருவுடையார் கோயில் ஆகிய மூன்றும் சேர்த்து அழியாத சோழர் பெருங்கோயில்கள் எனப்படுகின்றன. இத்தலம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.560 ft (170 m) நீளமும் 320 ft (98 m) அகலமும் கொண்ட முற்றத்துடன் கூடிய உயர்ந்த மேடைமீது இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. நடுக் கருவறையில் இக்கோயிலின் முதன்மை இறைவனான பிரகதீசுவரர் (சிவன்) லிங்க வடிவில் உள்ளார். முற்றத்தின் முக்கியப்பகுதி கிழமேற்காக 104 m (341 ft) by 30.5 m (100 ft) அளவுகொண்டுள்ளது.லிங்கத்தின் உயரம் 4 m (13 ft); அடிப்பகுதியின் சுற்றளவு 18 m (59 ft). 100 sq ft (9.3 m) அளவுள்ள கருவறைக்கு முன் அர்த்தமண்டபமும் தூண்களமைந்த முன்மண்டபமும் உள்ளன. கருவறையின் முன் இருபுறமும் 6 ft (1.8 m) உயரமுள்ள துவாரபாலகர்கள் சிலைகள் காணப்படுகின்றன.முதன்மைக் கருவறைச் சுவற்றின் வெளிப்புற மாடங்களில் அர்த்தநாரீசுவரர், நடராசர் போன்ற சிவனின் திருவுருவங்கள், மேலும் பிரம்மன், துர்க்கை, திருமால், சரசுவதி என ஐம்பதுக்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று சிவன் ஒரு அடியாருக்கு மாலை சூட்டுவதுபோல் செதுக்கப்பட்டுள்ளது. சிலர் அந்த அடியார் 63 நாயன்மார்களில் ஒருவரான சண்டீச்வரர் என்றும், வேறுசிலர் அவ்வுருவம் கோயிலைக் கட்டிய முதலாம் இராசேந்திரன் என்றும் கருதுகின்றனர். சோழர் கலைக்குச் சான்றாக விளங்கும் 11 ஆம் நூற்றாண்டு காலத்திய வெண்கலச் சிலைகள் இக்கோயிலில் காணப்படுகின்றன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக