நீங்கள் அறியாத அற்புத மருத்துவ குணங்களை கொண்ட வெண்சங்கின் மகத்துவங்கள்....
சங்கு ஆன்மீகத்தில் மட்டுமல்ல, மனிதர்களின் நல்வாழ்வுக்கும் பயன் உள்ள ஒரு கடல்வாழ் உயிரினத்தின் மேல் ஓடு, என்பது நாம் அறிவோம்தானே.சங்கினில் நிறைய வகைகள் இருந்தாலும், ஆன்மீகத்தில் வலம்புரிச்சங்கு உயர்வாகவும், மனிதர்களின் பயன்பாட்டில் வெண்சங்கு, மருத்துவரீதியாக உயர்வாகவும் கருதப்படுகிறது.
சங்கின் மருத்துவ குணங்கள் கைக்குழந்தைகளுக்கு சங்கில் இட்டு மருந்தைப்புகட்ட, மருந்தை வெளியே கக்காமல் குழந்தைகள் சாப்பிட்டு உடல்நலமாகும் என்பது, பாரம்பரியமாக முன்னோர் கடைபிடித்துவந்த ஒரு மரபு.
வாத நோய்க்கு- சங்கு பற்பம் !! சங்குடன் தாமரைஇலைகள் சேர்த்து உருவாகும் சங்கு பற்பத்தை, தேன், சோறு வடித்த கஞ்சியுடன் கலந்து சாப்பிட்டுவர, நாள்பட்ட விக்கல்,தும்மல்,ஜுரம், பித்தம் மற்றும் வாத சம்பந்தமான வியாதிகள் தீரும். தசைப்பிடிப்பும் சரியாகும். தொடர்ந்து சாப்பிட்டுவர, கண் வியாதிகள் நீங்கும்.
வெண் குஷ்டத்திற்கு-சங்கு செந்தூரம்!1 சங்குடன் சோற்றுக்கற்றாழை உள்ளிட்ட சில மூலிகைகளைச்சேர்த்து இடித்து, சித்த மருத்துவ முறையில் பதப்படுத்தப்பட்ட பொடியே, சங்கு செந்தூரம் எனப்படும். சங்கு செந்தூரம், வெண்குஷ்டம் எனும் சரும நோய்க்கு அருமருந்தாகும். சங்கு செந்தூரத்தை எலுமிச்சை சாற்றுடன் கலந்து தினமும் சாப்பிட்டுவர, மன உளைச்சலைத் தந்துவந்த வெண்குஷ்டம் விரைவில், மறையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக