கொரோனா வைரஸ் அறிகுறிகளும் அதை தடுக்கும் வழிமுறைகளும்
சீனாவில் கண்டறியப்பட்டு தற்போது உலகின் பல நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒருவகை தொற்று கொரோனா வைரஸ். இது விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவி, ஒரு மனிதனிடமிருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது.
ஜலதோஷம், காய்ச்சல், தொண்டையில், மூக்கில், நெஞ்சில் சளி தொல்லை, மூச்சு விடுவதில் சிரமம், வறண்ட இருமல், தொண்டை வலி போன்றவை ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். சிலருக்கு வயிற்றுப் போக்கும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
கொரோனா வைரஸ் நீர் குமிழிகள் மூலம் பரவும் என்பதால் தும்மல், இருமல் தொற்றுகள் உள்ளவர்களின் அருகில் இருப்பதை தவிர்க்கவும். காய்ச்சல் தொற்று உள்ளவர்கள் பொது இடங்களுக்கு செல்லவதை தவிர்க்கவும். கை குலுக்கும் பழக்கத்தை தவிர்த்து வணக்கம் தெரிவிக்கலாம். பொது இடங்களுக்கோ அல்லது வெளியே சென்று வந்தால் உடனே கை, கால்களை சுத்தப்படுத்த வேண்டும். கைகளை அடிக்கடி சுத்தமாக கழுவிட வேண்டும். இந்த வைரஸ் காற்றின் மூலம் பரவுவது இல்லை தொடுதல் மூலமாகவே பரவுகின்றது, இதன் காரணமாகதான் கைகளை சுத்தமாக கழுவவும், கைகளை அடிக்கடி வாய் , கண் மற்றும் முகங்களில் தொடுதலை தவிர்க்க அறிவுரை வழங்கபடுகின்றன.. வைரஸ் தொற்றுக் கண்டு பயப்படத் தேவையில்லை. இதை பற்றிய சரியான புரிதல் மற்றும் முறையான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளின் மூலம் வராமலும் பரவாமலும் பாதுகாக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக