சனி, 28 மார்ச், 2020

முந்திரிப் பருப்பு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்...

முந்திரிப் பருப்பு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்...


முந்திரிப் பருப்பில் பொட்டாசியம் உள்ளதால்,ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். முந்திரிப் பருப்பில் செலினியம் மற்றும் வைட்டமின் ஈ அதிகம் உள்ளதால், புற்றுநோய் உருவாக்கும் செல்களை தடுத்து, புற்றுநோய் வராமல் பாதுகாக்கும், இதனால் புற்றுநோய் வராமல் இருக்க தொடர்ந்து முந்திரிப்பருப்பை சாப்பிட்டு வரலாம்.
முந்திரிப் பருப்பில் காப்பர் என்னும் செம்பு தாது பொருள் இருப்பதால், தலைமுடி நரைக்காமல் பாதுகாக்கிறது.மேலும் தலைமுடியின் கருமை நிறத்தை பாதுகாத்து, தலைமுடி நரைக்காமல் இருக்கும். இதனால் தலைமுடி நரைக்காமல் இருக்க, தினமும் முந்திரி பருப்பை சாப்பிட்டு வரலாம்.
தினமும் முந்திரி பருப்பை சாப்பிடுவதால் சிறுநீரகங்களில் உருவாகும் சிறுநீர் கற்கள் உருவாகுவதை தடுக்கலாம்.முந்திரிப்பருப்பை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும். மேலும் முந்திரி பருப்பை சாப்பிடுவதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக