திங்கள், 30 மார்ச், 2020

ஸ்மார்ட் போன்களில் பேட்டரியை சேமிக்க டிப்ஸ்..!!




ஸ்மார்ட் போன்களில் பேட்டரியை சேமிக்க டிப்ஸ்..!!

1. திரை ஒளிர்வு (Brightness)
மொபைலின் Brightness-ஐ முடிந்தவரை குறைவாக வைத்திருங்கள். அதிகமாக வைத்திருந்தால் அதிகம் பேட்டரி சார்ஜை எடுத்துக் கொள்ளும்.

 Settings => Display => Brightness பகுதிக்கு சென்று Brightness-ஐ மாற்றிக் கொள்ளலாம்.


2. GPS, Wi-Fi & Bluetooth
தேவைப்படாத நேரங்களில் GPS, Wi-Fi, Bluetooth ஆகியவற்றை நிறுத்திவிடுங்கள். இவைகள் எப்போதும் On செய்திருந்தால் பேட்டரி சார்ஜை எடுத்துக் கொள்ளும்.



3. Live Wallpaper
ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள வசதிகளில் ஒன்று Live Wallpaper எனப்படும் தொடுவுணர்வு கொண்ட அனிமேசன் புகைப்படங்கள். இந்த வசதியும் பேட்டரியை எடுத்துக் கொள்ளும். விருப்பமிருந்தால் சில நாட்கள் வைத்துக் கொண்டு பிறகு நீக்கிவிடுங்கள்.

 4. Home Screen Widgets
ஆண்ட்ராய்ட் Home Screen-ல் நாம் வைக்கும் Widget-களை நாம் பயன்படுத்தவில்லை என்றாலும், அதுவும் கொஞ்சம் பேட்டரி அளவை எடுத்துக் கொள்ளும். அதனால் நாம் அடிக்கடி பயன்படுத்துபவற்றை மட்டும் வைத்துவிட்டு மற்றவற்றை நீக்கிவிடுவது நன்று.

 5. Background Applications

 சில அப்ளிகேசன்களை பயன்படுத்தவில்லை என்றாலும் பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும். அதுவும் பேட்டரி சார்ஜை எடுத்துக் கொள்ளும். எனவே, அது போன்ற அப்ளிகேசனை Uninstall செய்வது நல்லது.

6. Vibrate Mode
பெரும்பாலான போன்களில், போனுக்கு அழைப்பு வருகையிலும், மெசேஜ் கிடைக்கும்போதும், ஒலியோடு, போன் அதிர்வும் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது பேட்டரியின் சக்தியைப் பெரும் அளவில் எடுத்துக் கொள்ளும். எனவே, அதிர்வினை இயங்காமல் வைப்பது, பேட்டரியின் வாழ்நாளை அதிகப்படுத்தும்.

7. High Temperature
போன் வெப்பமான சூழ்நிலையில் செயல்படுவது, பேட்டரியின் செயல்பாட்டினைக் குறைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக