நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா ?: இதோ கொய்யா பழம் இருக்கிறது !!
மாறிவரும் பருவநில மாற்றத்தால் அடிக்கடி நாம் நோய்வாய்படுகின்றோம். இதற்கு காரணம் நம் உடலில் நோய்எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதே.சிலருக்கு மழையில் நனைந்தால் கூட காய்ச்சலோ, ஜலதோஷமோ வருவதில்லை. ஏனென்றால் அவர்களுக்கு நோய்எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால்தான் . நம்முடைய பாஸ்ட் புட் உணவு பழக்கத்தால் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த உணவுகளையே சாப்பிட்டு வருகிறோம் . இதற்கான ஒரு முக்கிய தீர்வாக அமைகிறது கொய்யா பழம்.
கொய்யா பழத்தில் உள்ள சத்துக்கள் :
கொய்யா பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. அது மட்டும் இன்றி வைட்டமின் எ, வைட்டமின் பி 9, பொட்டாசியம், சோடியம், தாது உப்புக்கள், நார் சத்து, மற்றும் போலிக் அமிலம் நிறைந்துள்ளது.
கொய்யா பழத்தின் மருத்துவ குணங்கள் :
1: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
2: ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.
3: புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது.
4: நீரிழிவு நோயை குணப்படுத்துகிறது.
5: உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதயத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்கிறது.
6: கண்களின் பார்வை திறனை அதிகரிக்க செய்கிறது.
7: பற்கள் மற்றும் ஈறுகள் சம்மந்தப்பட்ட நோய்களை குணமாக்குகிறது.
8: இருமல் மற்றும் சளிக்கு எதிராக சிறப்பு பங்காற்றுகிறது.
9: உடல் எடையை குறைக்கிறது.
10: முகத்தில் சுருக்கங்கள் இல்லாமல் இளமையாக வைத்துக் கொள்கிறது.
எனவே இத்தனை பயன்கள் உள்ள கொய்யப்பழத்தை தினமும் சாப்பிடுவோம் நலன் பெறுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக