தர்ப்பூசணி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்...
தர்ப்பூசணி பழத்தை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால்.உடல் எடை குறையும்.இதனால் உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் தர்ப்பூசணி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் எடை குறையும்.மேலும் நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ள கொழுப்புகளை கரையும்.

தர்ப்பூசணி பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் பீட்டாகரோட்டின் இருப்பதால் சருமத்தில் உள்ள கோலாஜின் உற்பத்தியை அதிகரிக்கும்.மேலும் சருமத்தில் உள்ள வெடிப்புகள்,சரும வறட்சி,சரும சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கும்.மேலும் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.இதனால் தர்ப்பூசணி பழத்தை சாப்பிட்டு வரலாம்.

தர்ப்பூசணி பழத்தில் நார்சத்து மற்றும் நீர்சத்துகள் அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாது.உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் செய்யும்.மேலும் இதய நோய்கள் ஏற்படாமல் இருக்கும்.இதனால் தர்ப்பூசணி பழத்தை சாப்பிட்டு வரலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக