முலாம் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்...
முலாம் பழத்தில் வைட்டமின் சத்துக்கள் உள்ளதால் கண்பார்வைக்கு மிகவும் நல்லது.மேலும் கண்களில் இருக்கும் செல்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.இதனால் கண் பார்வை குறைவாக உள்ளவர்கள் முலாம் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.

கோடை காலங்களில் முலாம் பழத்தை சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள சூடு தணியும்.மேலும் உடல் உஷ்ணமும் குறையும்.இதனால் முலாம்பழத்தை கோடைக்காலங்களில் சாப்பிடலாம். முலாம் பழத்தில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளதால், நீர்ச்சுருக்கு ஏற்படாது, இதனால் முலாம் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். மேலும் சிறுநீரில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.

முலாம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் முலாம் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். முலாம் பழத்தில் கொழுப்பைக் கரைக்கக் கூடிய வேதிப் பொருள்கள் உள்ளன. இதனால் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் முலாம் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். உடலில் கொழுப்புகள் சேராமலும் தடுக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக