செவ்வாய், 24 மார்ச், 2020

காலை மற்றும் மாலை வேளைகளில் உங்கள் வீடுகளில் விளக்கு ஏற்றுகிறீர்களா?


காலை மற்றும் மாலை வேளைகளில் உங்கள் வீடுகளில் விளக்கு ஏற்றுகிறீர்களா?


மின்சாரம் கண்டுபிடிப்பதற்கு முன்பு மனிதன் இருளைப் போக்குவதற்கு ஆகவும், இரவு நேரங்களில் வெளிச்சத்திற்காகவும், விளக்குகளை தான் உபயோகித்து வந்தான். மேலும் மேலை நாடுகளிலிருந்து பெரும் பெட்ரோல், டீசல் போன்ற எண்ணெய்களை உபயோகப்படுத்தாமல், தேங்காய், எள், நிலக்கடலை, வேப்பங்கொட்டை, ஆமணக்கு, பின்னங்காய், பனங்கொட்டை இவைகளை அரைத்து இதிலிருந்து கிடைக்கும் எண்ணெய்களை சமையல் மற்றும் விளக்கு எரிப்பதற்கு உபயோகித்து வந்தான்.
கோவில் மற்றும் வீடுகளில் தேங்காய், எள், ஆமணக்கு, பசுவின் நெய். இவைகளை மட்டுமே ஊற்றி விளக்குகளை ஏற்றி வந்தான். மேலும் நாம் விளக்குகளில் தேங்காய், எள், ஆமணக்கு, பசுவின் நெய். போன்ற பலவிதமான எண்ணெய்களை ஊற்றி விளக்கு ஏற்றும் போது அதிலிருந்து வரும் காற்றானது சுற்றுப்புறத்தை தூய்மை ஆக்கும். மேலும் அந்த எண்ணெய்களை நாம் சாப்பிடாமலேயே அதனுடைய சத்துக்கள் அனைத்தும், அதை நாம் சுவாசிக்கும் போது நம் உடலில் சேர்ந்துவிடும்மேலும். மேலும் நம் உடலிற்கு தேவையான நல்ல விஷயங்களை கொடுக்கும். மேலும் எந்த விதத்திலும் தீங்கு செய்யாது.
ஆனால் மேலை நாடுகளில் இருந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் போன்றவற்றை எரிக்கும் போது அது வெளியிடும் புகையானது வளி மண்டலத்தை பாதித்து விடும். மேலும் அதை சுவாசிக்கும் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும். நம் முன்னோர்கள் காலை மற்றும் மாலையில் வீடுகளில் மற்றும் கோவில்களில் விளக்கை ஏற்றி வைத்து வழிபாடு நடத்திய தன் பின்னால் இருக்கும் அறிவியல் காரணத்தை இப்போது தாங்கள் அறிந்திருப்பீர்கள். நீங்கள் காலை மற்றும் மாலை உங்கள் வீடுகளில் விளக்கு ஏற்றவில்லை என்றால், இன்று முதல் தினமும் விளக்கேற்றி வழிபடுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள். மேலும் மெழுகுவர்த்தியை உபயோகிப்பதை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். அது வெளியிடும் புகையானது மனிதனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக