செவ்வாய், 31 மார்ச், 2020

ஆரோக்கியமான இல்லற உறவிற்கு நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்.

ஆரோக்கியமான இல்லற உறவிற்கு நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்.


இதுபோன்ற சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ள நம்முடைய பக்கத்தை Follow செய்யுங்கள்.
சில விஷயங்களை மூடி மறைக்காமல் வெளிப்படையாகப் பேசுவதும், வாக்குவாதத்தில் ஈடுபட்டு அதனை பேசி முடிப்பதும் மிக நல்லது என்கின்றனர் மனோதத்துவ நிபுணர்கள். இதனால் ஒருவரைப் பற்றி மற்றவருக்கு முழுமையாக புரிந்து கொள்ள வாய்ப்பு அமைகிறது.
உறவைத் தவிர்க்காதீர்
பல இந்திய தம்பதிகள் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் பிறந்த உடனே உடலுறவு கொள்ளும் நாட்களின் எண்ணிக்கையை குறைக்கத் துவங்குகின்றனர். இதனால் இவர்களுக்கும் இடையே இருக்கும் ஒற்றுமை நிலை குலைகின்றது. இதனை முடிந்தவரை தள்ளிப்போடாமல் இருப்பது நல்லது.
சிறு பரிசுகள்
எப்போதாவது கணவன் மனைவி இருவரும் தங்களுக்குள் சிறு பரிசுகளை பரிமாறிக்கொள்வது உறவை நீட்டிக்கச் செய்யும். ஆன்லைனில் ஆர்டர் செய்து எதிர்பாராமல் சிறு பரிசுகளை இன்றும் பலர் பரிமாறுகின்றனர். இது இவருக்கும் இடையே உள்ள புரிதலை அதிகப்படுத்துவதோடு அன்பையும் அதிகரிக்கிறது.
முத்தம்
முத்தத்தை உறவு கொள்ளும்போதுதான் துணைக்கு அளிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு நாளில் எவ்வளவோ வேலைகள் இருந்தாலும் இருவரும் களைப்பாக இருக்கும்போது முத்தங்களை பரிமாறிக் கொள்வது மேலை நாடுகளில் சகஜமான ஒன்று. அனால் நம் நாட்டில் இதை பெரிய குற்றம் போல கருதுகின்றனர். அனால் இவாறு முத்தத்தை பரிமாறிக்கொள்வது உடல்நலத்தையும் மன நிம்மதியையும் அதிகரிக்கிறது. வீட்டு குழந்தைகள் இருந்தாலும் இந்த முத்தப் பரிமாற்றம் இன்றியமையாதது. 
சுற்றுலா
சமீப காலத்தில் வயதான தம்பதிகள் சுற்றுலா செல்வது என்பது வெகுவாக குறைந்துவிட்டது. கோயில்கள், புனித தலங்கள் மட்டுமல்லாமல் மலைபிரதேசங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா செல்வது மனதுக்கு இதம் தரும்.
எனவே நிம்மதியான வாழ்க்கைக்கு மேற்கண்ட அனைத்தையும் கடைப்பித்தால்கணவன் மனைவி இடையே ஒரு நல்ல ஒற்றுமையுடன் 
 அமைதியான வாழ்க்கையை வாழலாம்.
செய்தியை முழுமையா படித்ததற்கு நன்றி...இந்த செய்தி உங்களுக்கு பிடித்து இருந்தால் லைக் மற்றும் ஷேர் செய்யுங்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக