புதன், 11 மார்ச், 2020

குழந்தைகளுக்கான சிறந்த மருத்துவக் குறிப்புகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா?

குழந்தைகளுக்கான சிறந்த மருத்துவக் குறிப்புகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா?


குழந்தைகளை சிறந்தமுறையில் பேணி வளர்க்க விரும்புவோர் பின் வரும் மருத்துவ குறிப்புகளை பின்பற்றலாம்.
குழந்தைகளுக்கு 6 லிருந்து 12 மாதம் வரை தாய்ப்பாலுடன் ஆட்டுப்பால்,பழச்சாறு,பசும்பால் கொடுத்து வருவது நலம்.
குழைந்தகளுக்கு தேங்காயை சிறு சிறு கீற்றுகளாக நறுக்கி கடித்து சாப்பிட கொடுக்கலாம்,பசும்பாலை விட சக்தி வாய்ந்தது.
குழைந்தகளுக்கு மாந்தம் குணமாக கனப்பூண்டு இலை சாறு அரை கரண்டி வீதம் கொடுத்து வரலாம்,தேன் கலந்தும் கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு அக்கி குணமாக ஆலம் விழுதை சாம்பலாக்கி நல்லெண்ணெய் சேர்த்து குழைத்து தடவி வர குணமாகும்.
வயிறு பெருத்து உடல் சிறியதாக உள்ள குழந்தைகளுக்கு கோரைக் கிழங்கை தோல் நீக்கி சூப் வைத்து கொடுத்து வர நலம் உண்டாகும்.
எலும்பும் தோலுமான குழந்தைகள் நல்வளர்ச்சி உண்டாக பூசணிக்காயை துருவி பிழிந்து பிட்டவியலாக்கி நாட்டு சர்க்கரையுடன் சாப்பிட்டு வர வேண்டும்.
குழந்தைகளுக்கு னாய் உண்டாகாமல் இருக்க வசம்பு இலை, மஞ்சள் சேர்த்து அரைத்து உடம்பில் தேய்த்து குளிக்கலாம்.மேனி அழகு பெறும்.
குழந்தைகளுக்கு ஜீரண சக்தி உண்டாக சதகுப்பை விதையை கொதிக்க வைத்து நாட்டு சக்கரை சேர்த்து வடிகட்டி கொடுக்க நலம் உண்டாகும்.!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக