நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!!!
வாழ்க்கையில் வளமாக வாழவேண்டும் என்றால் உடல் திடமாக இருக்க வேண்டும் அதற்கு முக்கியமானதாய் தேவைபடுவது நோய் எதிர்ப்பு சக்திதான்.
Credits - Google
ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யலாம்.
குழந்தைகளுக்கு தாய்பாலின் மூலம் சென்றடைந்து நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்குகிறது.
Credits - Google
- திராச்சை, ஆரஞ்ச், எலுமிச்சை போன்றவற்றில் வைட்டமின் சி உள்ளதால் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது. மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கவும் வல்லது. வெள்ளை இரத்த அணுக்களையும் அதிகரிக்க உதவுகிறது.
- குடை மிளகாய் சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம், மேலும் இதில் பீட்டா கேரட்டின் உள்ளதால் கண்களுக்கும், தோலுக்கும் நல்லது.
- பிரக்கோலி, கேபேஜ், காலிப் ப்ளாரில் வைட்டமின் இ, ஏ, சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
- பூண்டில் சல்பர் சார்ந்த பொருட்கள் இருப்பதால் இது உடலுக்கு வலுவை தருகிறது.
- இஞ்சி தொண்டை, மூக்கு அரிப்புகள் போன்றவற்றைக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது, மேலும் இது நோயை தடுக்க சிறந்த மருந்தாக இருக்கிறது.
- கருவேப்பிள்ளையில் வைட்டமின் சி உள்ளதால் இது உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை கொடுக்கிறது. மேலும் இதை தினமும் சாப்பிட்டு வந்தால் முடிக்கொட்டுவதை தவிர்க்கலாம்.
- முட்டை உடலுக்கு வலுவைக் கொடுக்கிறது.
- பாதாம் உடலுக்கு மிகவும் நல்லது. இதில் அதிகமான ப்ரோட்டின் சத்து உள்ளதால் தினமும் இதை காலையிலும், மாலையிலும் சாப்பிட்டு வரலாம்.
- மஞ்சள்தூளை சாப்பாட்டில் கலப்பதன் மூலம் பாக்ட்டீரியாவை தடுக்கலாம்.
- பப்பாயாவை சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி நிச்சயம் அதிகரிக்கும்.
- கோழிக்கறியில் வைட்டமின் பி6 உள்ளதால் உடலுக்கு நன்மையை தரும்.
- பிரான், நண்டு போன்றவற்றையும் சாப்பிடுவதால் நோய் வருவதை தவிர்க்கலாம்.
- மீன், கேரட்டில் வைட்டமின் ஏ உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக