சனி, 28 மார்ச், 2020

செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்...

செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்...


செவ்வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால், ரத்தத்தை சீராக வைத்துக் கொள்கிறது.இதனால் இதயத்திற்கு சரியான அளவில் ரத்தம் சென்று வர செவ்வாழைப் பழத்தில் உள்ள பொட்டாசியம் தான் காரணம்.மேலும் இதயநோய்கள் ஏற்படாமல் காக்கிறது.இதனால் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் செவ்வாழைப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.இதனால் ரத்த அழுத்தம் சரியான நிலையில் இருக்கும்.
செவ்வாழை பழத்தில் வைட்டமின் ஏ உள்ளதால், கண்களில் ஏற்படும் கண்புரை நோயை தடுக்கும். மேலும் கண்களில் உள்ள கருவிழி படலம்,கருவிழி ஆகியவற்றை பாதுகாக்கிறது. மேலும் மாலைக் கண் நோய் ஏற்படாமலும் தடுக்கும். இதனால் செவ்வாழை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் வாந்தி,தலைசுற்றல், மனச்சோர்வு ஆகியவை ஏற்படும். கர்ப்பிணிப் பெண்கள் தினமும் செவ்வாழைப்பழம் சாப்பிடுவதால் இந்த பிரச்சனைகள் ஏற்படாது. மேலும் செவ்வாழைப்பழத்தில் பொட்டாசியம் உள்ளதால் கருவில் வளரும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால்,மலச்சிக்கல்,அஜீரண கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.மேலும் மூலநோய் உள்ளவர்கள் செவ்வாழைப்பழம் சாப்பிடுவதால் மூலநோயிலிருந்து விடுபடலாம்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக