இந்தியாவில் உள்ள முக்கிய கடற்கரைகள் பற்றி தெரிந்து கொள்வோம்
இந்தியாவில் சுற்றுலா என்றாலே அனைவரையும் கவரும் ஒரு இடம் என்றாலே அது கடற்கரை தான் இங்குள்ள முக்கிய கடற்கரைகளை காணலாம்
சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக செல்ல வேண்டிய இடம் கோவா கடற்கரை ஆகும் இங்கு சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகின்றனர் சன்பாத், கூலிங் பியா், டி.ஜே. இசைக்கச்சோி உள்ளிட்டவை இங்கு பிரபலமானதாக உள்ளது.
கா்நாடகா மாநிலம் கோகா்னா கடற்கரை மிகவும் பிரபலமானதாக உள்ளது. சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் இந்த கடற்கரைக்கு நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து செல்ல ஏதுவான வகையில், போக்குவரத்து சேவை அமைந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய பகுதியில் இந்த கடற்கரை அமைந்துள்ளது. செந்நிற மணலால் அமைந்துள்ள கடற்கரை சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈா்த்து வருகிறது.
கேரளா மாநிலம் அலப்பி மாவட்டத்தில் அமைந்துள்ள மராரி கடற்கரை மிகவும் புகழ் பெற்றது. இப்பகுதியில் பெரும்பாலான படங்களின் காட்சிகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.மராரி கடற்கரையில் இருந்து சிறிது தொலைவில் தான் கோவலம் கடற்கரை அமைந்துள்ளது. ஒரு திசையில் கலங்கலை விளக்கமும், மறு திசையில் உள்ள தென்னை மரங்களும் பயணிகளை வெகுவாக கவா்ந்து வருகிறது.
தேனிலவு செல்லும் புதுமண தம்பதிக்கு அந்தமான் கடற்கரை சிறந்த சுற்றுலா தளமாக அமைகிறது. கடற்கரையில் உள்ள வெள்ளை நிற மணல் இயற்கையின் அழகை மெருகூட்டுகிறது.
இந்தியாவில் ஓய்வெடுக்கவும், யோகா செய்யவும் மிகவும் பொருத்தமான கடற்கரையாக புதுச்சேரி கடற்கரை அமைந்துள்ளது. மேலும் கடற்கரையின் அருகே அமைந்துள்ள ஆரோவில் ஆசிரமம் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக பாா்க்க வேண்டிய மற்றும் அமைதியை வழங்கக் கூடிய இடமாக விளங்குகிறது.
மிகவும் தூய்மையான மற்றும் சூரிய குளியலுக்கு ஏற்ற கடற்கரையாக மகாபல்லிபுரம் கடற்கரை அமைந்துள்ளது. இங்கு கிடைக்கக் கூடிய கடல் உணவு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக