புளிச்சக்கீரையின் நன்மைகளும் அதன் பயன்களும் அறிய இதை படிக்க
உடலுக்கு நல்ல பலத்தை தரக்கூடிய இக்கீரையை அடிக்கடி பயன்படுத்தலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அதிகளவில் அடங்கியுள்ளன. இதன் பூக்களையும் சேகரித்து சமைத்து சாப்பிடுகின்றனர்.
மலச்சிக்கல் நீங்க :
மலச்சிக்கலால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள். இக்கீரையை மூன்று நாட்களுக்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாது.
தாது விருத்திக்கு:
எதுவாக இருப்பினும் புளிச்ச கீரையை நெய்விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியாகும். இந்திரியத்தை கெட்டிப்படுத்தும்.
இக்கீரையை உண்பதால் தீரும் நோய்கள் :
சொறி, சிரங்குகளை போக்குகிறது; குடற் புண்ணை ஆற்றும்; உடலிலுள்ள புண்களை ஆற்றுகிறது; பசி மந்தத்தை போக்குகிறது; வயிற்று வலியை போக்கும்; இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்; ஜீரணக் கோளாறுகளை சரிபடுத்தும்; இதய நோய் வராமல் பாதுகாக்கும்; சிறுநீரகக் கோளாறுகளை குணப்படுத்தும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக