பெண்கள் இந்த விஷயங்களை தன அம்மாக்களிடம் தான் கூறுவார்கள்
பெண்கள் இந்த விஷயங்களை தன அம்மாக்களிடம் தான் கூறுவார்கள்
சமரசம்! யாருக்காகவும், எதற்காகவும் உங்கள் வாழ்க்கையை, வேலையை சமரசம் செய்துக் கொள்ள வேண்டாம். உங்களுக்கு எது தேவையோ அதை யாருக்காகவும் இழக்க வேண்டாம். அதற்காக யாரையும் புண்படுத்தவும் வேண்டாம்.
- பயணம்! நிறைய பயணம் செய்யுங்கள். பதின் வயதில் இருந்து இளமை காலத்தில் நீங்கள் பயணிக்கும் தருணங்கள் தான் உங்கள் வாழ்க்கையின் சிறந்த பாடங்கள். அவை கற்றுத்தரும் பாடங்கள் இன்றியமையாதவை.கவலை!
- கவலை பட வேண்டாம். தடைகள் இல்லாத நீரோட்டம் கடலை சேர்வதில்லை, எதிரணி இல்லாத விளையாட்டில் சுவாரஸ்யம் இருப்பதில்லை. எனவே, தோல்வி அல்லது முயற்சிகள் சரியான பலன் தராத நேரத்தில் சோர்வடைய வேண்டாம், கவலை அடைய வேண்டாம்.முடியும்!
- “முடியும்” என்ற சொல்லை எந்த சூழ்நிலையிலும் மறந்துவிட வேண்டாம். அது காதல், வாழ்க்கை, வேலை என அனைத்திற்கும் பொருந்தும். உங்களுக்கு நெருக்கமானவர்களே கூட உங்களை விட்டு செல்லலாம், மீண்டும் வந்து இணையலாம். எனவே, எதற்கும் வருந்தி முடியாது என்ற நிலைக்கு சென்றுவிட வேண்டாம்.ரசிப்பு!அனைத்தையும் ரசியுங்கள். கடல், சூரியன், மேகங்கள், சிறிய செடி, மொட்டு, பூக்கள், மழலை, காதல் என கண்ணில் ரசிக்கும் படி இருக்கும் எதையும் வெறுமென பார்த்து செல்ல வேண்டாம். சில நிமிடங்கள் ஒதுக்கி ரசித்துவிட்டு செல்லுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக