சனி, 28 மார்ச், 2020

பல அற்புத மருத்துவ நன்மைகள் கொண்ட கோவைக்காய்...!

பல அற்புத மருத்துவ நன்மைகள் கொண்ட கோவைக்காய்...!


கோவக்காயில் இரும்பு சத்து அதிகம் உள்ளது இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடல் சோர்வு நீங்கி, நீண்ட நேரம் செயலாற்றும் திறன் ஏற்படுகிறது.
வாரத்தில் இருமுறை கோவக்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை செய்து சேர்த்து சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறுகள், மலச்சிக்கல் பிரச்சனை தீரும். 
 
உடல் எடை அதிகரிப்பது ஒரு கவலைக்குரிய பிரச்சனை ஆகும். உணவு கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், உடலுக்கு தேவையான பல சத்துகள் கொண்ட, கொழுப்பை கரைக்கக்கூடிய கோவக்காய் பதார்த்தங்களை உணவுகளில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வருவது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் நல்ல பலன் அளிக்கும்.
இதய நலத்திற்கும் பொட்டாசியம் சத்து தேவையாக இருக்கிறது. ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து இதயத்திற்கு சரியான அளவில் ரத்தம் சென்று வர கோவக்காயில் நிறைந்திருக்கும் பொட்டாசியம் அதிகம் உதவுகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக