வெள்ளி, 11 மே, 2018

கருத்தரிக்க முயற்சிக்கும் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய பழக்க வழக்கங்கள்...

கருத்தரிக்க முயற்சிக்கும் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய பழக்க வழக்கங்கள்...


இன்றைய காலகட்டத்தில் குழந்தைக்காக முயற்சிப்போர் அதிகம் பேர் உள்ளனர். அதற்காக பல மருத்துவமனைகளுக்கு சென்று பல மருத்துவ பரிந்துரைகளை எடுத்துக் கொள்கின்றனர். மருத்துவ பரிந்துரைகளோடு நாமும் சில பழக்க வழக்கங்களை உணவு முறைகளை மாற்றிக் கொண்டு முயற்சி செய்தால் விரைவில் கருத்ததரிக்கலாம்.
ஒழுங்கற்ற மாதவிடாய் :
பொதுவாக பல பெண்களிடம் காணப்படும் ஒரு பொதுவான பிரச்சினை ஒழுங்கற்ற மாதவிடாய் ஆகும். ஒவ்வொரு பெண்ணிற்கும் மாதவிடாய் சரியாக 25 லிருந்து 30 நாட்களுக்குள் ஏற்பட்டால் அதனை ஒழுங்கான மாதவிடாய் என்பர். அப்படி இல்லாத பட்சத்தில் அது ஒழுங்கற்ற மாதவிடாய் எனப்படுகிறது.
ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்பட சில காரணங்கள் உள்ளன. அவற்றில் சில..
  • கரு முட்டை சரியான காலத்தில் உருவாகாமல் இருத்தல்
  • நீர்க்கட்டி
  • ஹார்மோன் குறைபாடு
இத்தகைய பிரச்சினைகளை நமது உணவு முறை பழக்கங்களால் குறைக்க இயலும்.
உணவு முறையில் மாற்றம்:
'உணவே மருந்து' என்பர் நம் முன்னோர்கள். அதற்கேற்ப நமது உணவு முறைகளில் மாற்றம் கொண்டு வருவதால் கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கலாம்.
கருத்தரிக்க முயற்சிக்கும் பெண்கள் முடிந்த வரை கடைகளில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அதோடு பாக்கெட்டில் விற்கப்படும் குளிர்பானங்கள் ஜூஸ் வகைகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். எந்த உணவாக இருந்தாலும் வீட்டிலேயே சமைத்து சாப்பிட வேண்டும்.
பெண்கள் சமையலில் தேங்காய் எண்ணெய் தேங்காய் பால் போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வதால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகமாகும். மேலும், அசைவ உணவுகளில் பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மீன் வகைகள் அதிகம் சாப்பிடலாம். அதோடு, போலிக் அமிலம், இரும்புச் சத்து, புரதச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்வதால் கருத்தரிக்கும் திறன் மேம்படும். கருத்தரிப்பிற்கு ஏற்ற சில உணவுப் பொருட்கள் பற்றி இங்கே பார்க்கலாம்...
1. நல்லெண்ணெய்
விரைவில் கருத்தரிக்க பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தின் போது மட்டும் நல்லெலெண்ணெயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு சாப்பிடுவதால் கர்ப்பப்பை பலமடைகிறது. மாதவிடாய் காலத்தின் போது சரியாக இரத்தப் போக்கு இல்லாமல் உடலில் சேரும் கழிவுகளை வெளியேற்றுகிறது.இந்த கழிவுகள் உடலில் இருந்தால் கருத்தரிப்பில் தாமதம் ஏற்படுகிறது. இதனை சரி செய்ய மாதவிடாய் காலங்களில் பெண்கள் நல்லெண்ணெய் சாப்பிட வேண்டும். மேலும், இவ்வாறு சாப்பிடுவதால் கரு முட்டை வளர்ச்சி நன்றாக இருக்கும். ஒமுங்கற்ற மாதவிடாய் சரியாகும். கருத்தரிக்கும் வாய்ப்பு மேம்படும்.
2. பால், முட்டை 
பால் மற்றும் முட்டையில் உள்ள புரோட்டீன் மற்றும் இதர சத்துக்கள் கருத்தரிப்புக்கு உதவக்கூடியது ஆகும். பெண்கள் தினமும் டீ, காஃபி போன்றவற்றை தவிர்த்து பால் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். இனிப்புப் பண்டங்கள், வெள்ளை சர்க்கரை போன்றவற்றையும் தவிர்ப்பது நலம். மேலும், வாரம் 2 அல்லது 3 முறையாவது முட்டையினை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
3. கீரைகள்
கருத்தரிப்புக்கு ஏற்ற முக்கிய உணவு கீரை ஆகும். பெண்கள் தினமும் ஏதேனும் ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக இரும்புச் சத்து அதிகமுள்ள முருங்கைக்கீரை, பசலைக்கீரை, அரைக்கீரை போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
4.மாதுளை
பழங்களிலேயே மாதுளைப்பழம் பெண்களுக்கு கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகப்படுத்தும் தன்மை கொண்டது. ஒழுங்கற்ற மாதவிடாய் உள்ளவர்கள் தினம் ஒரு மாதுளை சாப்பிடுவதால் மாதவிலக்கு பிரச்சினை குறையத் தொடங்கும். மேலும், நீர்க்கட்டிகளையும் குறைக்கும் தன்மை கொண்டது. எனவே, விரைவில் கருத்தரிக்க தினம் ஒரு மாதுளை அவசியம் ஆகும்.
5. பருப்பு வகைகள்
பருப்பு வகைகள் அனைத்தும் புரோட்டீன் சத்து நிறைந்தவை. அத்தகைய பருப்புகளை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். அதிலும் சிறுபருப்பினை அடிக்கடி எடுத்துக் கொள்வது நல்ல பலனைத் தரும்.
6. நட்ஸ் வகைகள்
நட்ஸ் வகைகள் அனைத்துமே கருத்தரிப்புக்கு உதவக்கூடியது.முக்கியமாக பாதாம், வால் நட் போன்றவை கருத்தரிப்புக்கு மிகவும் ஏற்றது.
உடற்பயிற்சி :
ஒழுங்கற்ற  மாதவிடாய் உள்ள பெண்களும் கருத்தரிக்க முயற்சிப்பவர்களும் தினமும் சிறிதளவு நேரமாவது உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். மனதிற்கு இதமளிக்கும், பதற்றம், சோர்வினைக் குறைக்கும் யோகா, தியானம், நடை பயிற்சி போன்ற உடற்பயிற்சியினை செய்ய வேண்டும். தினமும் 1 மணி நேரமாவது நடை பயிற்சியினை கண்டிப்பாக செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது விரைவிலேயே உடலில் நல்ல மாற்றங்களை காண முடியும். நடை பயிற்சியால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் குறைவதோடு பெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் குணமாகத் தொடங்கும்.கரு முட்டை வளர்ச்சி நன்றாக இருக்கும். நீர்க்கட்டி குறையத் தொடங்கும். இதனால் கருத்தரிப்பு வாய்ப்பு அதிகரித்து விரைவிலேயே குழந்தைப் பேறு கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக