வியாழன், 31 மே, 2018

மாம்பழ பிரியர்களுக்கான ஈசி ரெஸி

மாம்பழ பிரியர்களுக்கான ஈசி ரெஸி

பொதுவா வெயில் காலம் வந்துட்டாளே மக்கள் பாடு திண்டாட்டம் தான். காலையில 8 மணிக்கெல்லாம் சுளிர்னு அடிக்குற வெயிலை திட்டத்தவங்களே இருக்க முடியாது. ஆனா இந்த ரணகளத்துலயும் ஒரு குதூகலமான விஷயம்னா அது தாங்க மாம்பழம். குழந்தைகள் முதல் பல்லு போன பாட்டி வரை அனைவரும் ரசித்து சாப்பிட கூடிய ஒரு சுவைமிக்க பழம். கோடைகாலத்தில் மட்டுமே கிடைக்கும் என்பதே இதன் சிறப்பு. இதற்காகவே சித்திரை மாதத்தை சீக்கிரம் வானு கூப்பிடற மக்களும் இருக்காங்க. அது சரி இந்த கட்டுரையில மாம்பழத்தை வைத்து வேற என்ன வெரைட்டி டிஷ்லாம் பண்ணலாம்ணு பார்க்கலாமா?
மேங்கோ சால்சா: ஒரு பீங்கான் பாத்திரத்தில் சிறு சிறு துண்டுகளாக மாங்காயை நறுக்கி போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் எலுமிச்சை சாறு, 2 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ், கொத்தமல்லி இலை போட்டு, சிறிது உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்தால் மாங்காய் சால்சா ரெடி...
மேங்கோ ஐஸ்டு டீ: என்ன தான் வெயில் காலமா இருந்தாலும் சரி என்னால டீ குடிக்காம இருக்க முடியாது.. அட எனக்கு அட்லீஸ்ட் 'டீ'யோட வாசனையாவது வேணும்ப்பாணு சொல்லுற டீ வெறியர்களுக்கான ஸ்பெஷல் ஐட்டம் தாங்க இந்த மேங்கோ ஐஸ்டு டீ. மாம்பழத்தை நீர் ஊற்றி மிக்ஸியில் அடித்து கொள்ள வேண்டும். அந்த கலவையை பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் மிதமான சூட்டில் வைக்க வேண்டும். இப்போது சிரப்பு போன்ற பக்குவம் வந்ததும் பாத்திரைத்தை இறக்கி விடுங்கள். இப்போது வேறொரு பாத்திரத்தில் கருப்பு டீ(BLACK TEA ) போட்டு டம்பளரில் வடிகட்டி கொண்டு அதனுடன் இந்த சிரப்பு கலவையை கலந்து டீ பிரியர்களுக்கு கொடுங்க... கண்டிப்பா அவங்க ஒன்ஸ் மோர் கேட்பாங்க...
மேங்கோ ஸ்மூத்தி: நன்கு பழுத்த மாம்பழத்தை தோல் சீவி பால் சேர்த்து மிக்ஸியில் அரைத்து பின்னர் அதனுடன் தேன் கலந்தால் சுவையான மேங்கோ ஸ்மூத்தி ரெடி.. குறிப்பு: இந்த சத்தான ஸ்மூத்தியை குழந்தைகளுக்கு கொடுக்கலாம் ஏனெனில் இயற்கையாக சூடு தன்மை உடைய மாம்பழத்தில் பால் சேர்ப்பதால் அதன் வீரியம் குறையும்.
மேங்கோ சாலட் ட்ரெஸ்ஸிங்: ஆரோக்கியத்துல அதிக அக்கறை இருக்க கூடியவர்களுக்கான வர பிரசாதம் தான் இந்த மேங்கோ சாலட் ட்ரெஸ்ஸிங். நன்கு பழுத்த மாம்பழத்தை சிறு துண்டுகளாக்கி அதனுடன் ஆரஞ்சு ஜூஸ் ஊற்றி, அதனுடன் கொத்தமல்லி இலை, நறுக்கிய பூண்டு பற்கள் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்க வேண்டும். மேலும் அதனுடன் தேன், உப்பு, விர்ஜின்ஆயில் சேர்த்தால் சத்தான மேங்கோ சாலட் ட்ரெஸ்ஸிங் தயார்.
எஃக்லஸ் மேங்கோ மௌஸ்: பார்த்தவுடனே எச்சில் ஊறும் இந்த மௌஸ் செய்வது மிக எளிது. இதற்கு தேவையான பொருட்கள் புயூர் மேங்கோ கலவை, கிரீம். ஒரு கண்ணாடி டம்பளரில் புயூர் மேங்கோ கலவையை ஊற்றி அதன் மேல் கிரீம் வைத்து, புதினா இலை அல்லது பெர்ரி பழம் வைத்து அலங்கரித்தால் கண்ணை கவரும் எஃக்லஸ் மேங்கோ மௌஸ் ரெடி.
மேங்கோ ஷிகான்ஜி: நொடி பொழுதில் செய்யக்கூடிய ஒரு ஹெல்தி டிஷ் தான் மேங்கோ ஷிகான்ஜி. மாம்பழ சாறுடன் நன்கு தண்ணீர் சேர்த்து அதில் எலுமிச்சை ஜூஸ், உப்பு, சீராக தூள், சாட் மசாலா சேர்த்தால் ஷிகான்ஜி ரெடி..
மேங்கோ பசில் சோடா: மாம்பழ சாற்றில் சோடா கலந்து அதனுடன் சர்க்கரை துளசி இலை சேர்த்தால் மேங்கோ பசில் சோடா தயார். உடல் புத்துணர்ச்சி அடைய இந்த பானம் அருந்தலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக