ஆயுளை அதிகரிக்க கண்டிப்பாக இதை செய்யவேண்டும்!. ஆராய்ச்சியாளர்கள் தகவல்!
ஆயுட்காலத்தை அதிகரிக்க சரியான தூக்கத்தை எடுத்துக்கொள்ளவேண்டியது அவசியம்.ஆய்வில் கண்டுபிடிப்பு.
மனித வாழ்வில் நிம்மதியான தூக்கம் ஒன்றே இன்றியமையாத ஒன்று. இன்றைய இயந்திர உலகில் வயது வேறுபாடின்றி அனைவரும் நிம்மதியான தூக்கத்தை இழந்து தவிக்கின்றனர். ஒருவர் வாழ்க்கையில் இயல்பான தூக்கம் இல்லையென்றால் அது அவர்களின் ஆயுளை குறைக்கும்.
இந்நிலையில் புதிய ஆய்வு ஒன்றில் சற்று ஆறுதல் தரும் விசயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது வார இறுதி நாட்களில் நீண்ட நேரம் தூங்குவது ஆயுட் குறைவை தடுக்கும் என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பெரும்பாலோனோர் வாரம் முழுவதும் கடினமாக உழைத்து வார இறுதியில் நன்கு தூங்கி ஓய்வு எடுக்கும் பழக்கம் உள்ளது. 38,000 பேரை வைத்து மேற்கொண்ட ஆராய்ச்சியிலேயே இந்த ஆறுதல் தரும் விசயம் வெளியாகியுள்ளது.
மேலும் நாள்தோறும் 5 மணி நேரத்துக்கு குறைவான நேரம் தூங்குபவர்கள் ஆயுட் குறைவை எதிர்நோக்கி வேண்டியிருக்கும் எனவும் எச்சரித்துள்ளனர். சுவீடனைச் சேர்ந்த ஸ்டோக்ஹோல்ம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களே இந்த ஆய்வினை மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
என்னதான் பணிச்சுமை இருந்தாலும் உங்களின் ஆயுட்காலம் அதிகரிக்க ஒவ்வொரு மனிதனுக்கும் சரியான தூக்கம் வேண்டும் என்பது அவசியம். குறைந்தது 5 மணி நேரமாவது நிம்மதியான தூக்கம் வேண்டும் என்பது அவசியம். ஏனென்றால் வழக்கத்திற்கு மாறான தூக்கமின்மை ஆயுளை குறைக்கக்கூடியது என்பதை கவனத்தில் கொண்டு நமது ஆயுட்காலத்தை அதிகரிக்க சரியான தூக்கத்தை எடுத்துக்கொள்ளவேண்டியது அவசியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக