திங்கள், 14 மே, 2018

இரவில் நிம்மதியான தூக்கம் வேண்டுமா? அப்போ கண்டிப்பா இத ட்ரை பண்ணுங்க!

இரவில் நிம்மதியான தூக்கம் வேண்டுமா? அப்போ கண்டிப்பா இத ட்ரை பண்ணுங்க!

இரவு சாப்பிட்டபின்பு, ஒரு தேக்கரண்டி தேன் மட்டும் சாப்பிட்டு வந்தால் நன்றாகத் தூக்கம் வரும். அல்லது மாலையில் 2 ஸ்பூன் தேன் மட்டும் சாப்பிட்டு, இரவில் வேறு ஒன்றும் சாப்பிடாமல் இருந்தால் நன்றாக தூங்க முடியும்.
வெங்காயத்தை நெய் விட்டு வதக்கிச் சாதத்தோடு பிசைந்து சாப்பிட்டு வந்தால் தூக்கம் இல்லாமல் துன்பப்படும் நோய் குணமாகும்.வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் எளிதில் தூக்கம் வரும். 
சிறிது கசகசா 2 முந்திரிப்பருப்பு சேர்த்து அரைத்துப் பாலில் கலந்து கொதிக்கவைத்து அதனுடன் சிறிது கல்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் தூங்கும் சக்தி அதிகரிக்கும். இதை தொடர்ந்து 10 நாட்களாவது செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
சீரகத்தை வறுத்து பொடி செய்து வாழைப்பழத்துடன் சாப்பிட்டு வந்தால் சுகமான தூக்கம் எளிதில் வரும். கெட்டித் தயிருடன் சிறிது உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் தூக்கம் நன்றாக வரும். அரைக்கீரை,சீரகம் சேர்த்து கஷாயமாக செய்து குடித்து வந்தால் தூக்கமின்மை குறையும்.
ஜாதிக்காய் பொடியுடன்,நெல்லிக்காய் சாறு சேர்த்து கலந்துச் சாப்பிட்டால் தூக்கமின்மை குறையும். வெள்ளரி விதைகளை அரைத்து பாலில் கலந்து குடித்து வந்தால் தூக்கமின்மை குறையும். இரவு உணவில் அவரைக்காயை சேர்த்துக் கொண்டால் தூக்கமின்மை குறையும். ஆரஞ்சு பழச்சாற்றில் தேனைக் கலந்து குடித்து வந்தால் நன்றாக தூக்கம் வரும். 
சப்போட்டா பழம் சாப்பிட்டு வந்தால் இரவில் நன்றாக தூக்கம் வரும்.மணலிக்கீரை,துளசி,வில்வம் இலை மூன்றையும் பொடியாக்கி தினமும் இரவு நேரத்தில் சாப்பிட்டு வந்தால் நன்றாக தூக்கம் வரும்.
பேரீட்சை,கேரட்,முருங்கை,ஆப்பிள்,எலுமிச்சை,திராட்சை,தேங்காய்ப்பால்,கொத்தமல்லி,நெல்லிக்காய் இவைகளில் ஏதேனும் ஒன்றை சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை குறையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக