செவ்வாய், 29 மே, 2018

தினமும் மாதுளை பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா!

தினமும் மாதுளை பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா!

மாதுளை பழம் ரொம்ப சுவையான பழம் ஆகும்.இதில் ஊட்டசத்துக்கள்,ஆண்டி ஆக்ரென்டுகள் ,ஃபைட்டோ வேதி பொருள்கள் போன்றவைகளெல்லாம் அதிக அளவில் இருக்கின்றன.
இங்கு பலருக்கு மாதுளை என்றால் ரொம்பவும் பிடிக்கும் .ஆனால் இதை உறித்து சாப்பிடுவதை கடினமாக நினைத்துக்கொண்டு இதனை பெரும்பாலும் சாப்பிட மாட்டார்கள்.
ஆனால் இந்த மாதுளை பழத்தை சாப்பிட்டால்,நம் உடலிற்கு பல நன்மைகள் இருக்கிறது.
நன்மைகள்:
மாதுளை இருதயத்தை பாதுகாக்கிறது.இது இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்களில் கெட்ட கொழுப்புகள் படிவதை தடுக்கிறது.
இதயம்,மற்றும் மூளை ஆகியவற்றிற்கு இரத்த ஓட்டம் சீராக செல்ல வழிவகுக்கிறது.
மாதுளையில் உள்ள ப்ரிப்டோஸ் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவுகிறது.
மாதுளை, இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.இதில் இயற்கையாக உள்ள ஆஸ்ப்ரின் ,இரத்தம் உறைவதை தடுப்பது மட்டுமல்லாமல்,இரத்தத்தின் அடர்த்தியை குறைத்து,உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
மாதுளையை தினசரி சாப்பிட்டு வந்தால்,அது உடலின் சரும செல்கள் பாதிக்கப்படுவதை தடுப்பது மட்டுமல்லாமல்,உடலில் தேவையற்ற புற்று நோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது.
மாதுளையில் உள்ள ஆண்டி ஆக்ஸிடென்ட்  இரத்த வெள்ளை அணுக்களை தூண்டி,கிருமிகள்,டாக்ஸின்களை உடலில் இருந்து வெளியேற்றி,வலிமையான நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குகிறது.
மாதுளை பழத்தை ஜூஸாக ஆண்கள் குடித்து வந்தால்,புற்று நோய் ஏற்படுவதை தடுக்க முடியும்.


மாதுளை ஜூஸ் வைற்றில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கிறது.மேலும்,ஒரு டம்ளர் மாதுளை ஜீஸில், ஒரு ஸ்பூன்  தேனை சேர்த்து குடித்து வந்தால்,செரிமானம் சம்மந்தமான பிரச்சனைகள் அனைத்தும் சரியாகிவிடும்.
இரத்த சோகை உள்ளவர்கள்,மாதுளை சாப்பிட்டு வந்தால், இரத்த வெள்ளை அணுக்களின் அளவு அதிகரிக்கிறது.
மாதுளையில்,கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து, வைட்டமின்கள் அதிகமாக இருக்கிறது.ஆகையால் இதனை சாப்பிட்டு வந்தால்,உடல் எடை கட்டுப்பாட்டுடன் இருப்பது மட்டுமல்லாமல் நாள்பட்ட நோயின் தீவிரமும் குறையும்.
  நன்றி!. வாய்மையே வெல்லும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக