பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் உதிரப் போக்குக்கு சிறப்பான தீர்வு
✦ பெண்களுக்கு மாதவிடாய்க் கால ங்களில் ஏற்படும் உதிரப்போக்குக்கு சித்த மருத்துவ த்தில் சிறப்பான தீர்வு உண்டு அதைப்பற்றி இங்கு காண்போம்.
✦ பெண்களுக்கு மாதவிடாய்க் கால ங்களில் ஏற்படும் உதிரப்போக்கு, உரிய அளவைவிட அதிகமாகவும், அதிக நாட்களுக்கும் இருந் தால் அதை அதி உதிரப்போக்கு எனகிறோம்.
*🍂காரணங்கள்🍃*
✦ ரத்தம் உறைவதில் ஏற்படும் குறைபாடுக ளினாலும், ரத்தசோகை, தைராய்டு நோய் கள், காசநோய், கருப்பைக்கட்டிகள், சினை ப்பை நீர்க்கட்டிகள், கர்ப்பத்தடை மாத்தி ரைகள் உட்கொண்டதன் பின் விளைவுகள் போன்ற காரணங்களாலும் அதிக உதிரப் போக்கு ஏற் படும்.
*🍂சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்🍃*
✦ அத்திப் பட்டையை மோர் சேர்த்து இடித்து ச் சாறு எடுத்து 30 மி.லி. அருந்தலாம்.
✦ அத்திப்பால் ஐந்து சொட்டு எடுத்து வெண் ணெய் சேர்த்து உண்ணலாம்.
✦ குங்கிலியத்தை நெய்விட்டுப் பொரித்து நீர் சேர்த்துக் குழைத்து, கால்ஸ்பூன் உண்ணலாம்.
✦ இளம் வாழைப்பூவை அவித்து 30 மில் லி சாறெடுத்துத் தேன் கலந்து உண்ண லாம்.
✦ இத்தியின் பிஞ்சை அரைத்து, கொட்டைப் பாக்கு அளவு உண்ணலாம்.
✦ தொட்டாற்சிணுங்கி
யின் இலைச் சாற்றை 15 மி.லி. அருந்தலாம்.
✦ நாவல் பட்டை, ஆவாரைப் பட்டை சம அள வு எடுத்து நான்கு பங்கு நீர் சேர்த்து, ஒரு பங்காக வற்றவைத்து அருந்தலாம்.
✦ கால்ஸ்பூன்லவங்கப் பட்டைப்பொடியை எடுத்துப்பாலில் கலந்து உண்ணலாம்.
✦ கவிழ்தும்பை இலையைக் கைப்பிடி அளவு எடுத்துத் தேன் சேர்த்து, வதக்கி நீர் சேர்த் துக் காய்ச்சி அருந்தலாம்.
✦ அசோகப் பட்டையை இடித்துச் சாறு எடுத்து 30 மி.லி. அருந்தலாம்.
✦ கட்டுக்கொடியின் இலைச்சாற்றை ஒரு டேபிள்ஸ்பூன் அருந்தலாம்.
✦ முள்இலவுப் பட்டை, தாமரைக் கிழங்கு, செம்பருத்தி வேர் இவற்றி ன் பொடியைக் கலந்து, அதில் அரை ஸ்பூன் எடுத்து நீரில் கலந்து உண்ணலாம்.
✦ மந்தாரைப் பூ மொக்கு ஐந்து எடுத்து ஒரு டம்ளர் நீர் சேர்த்துக் காய் ச்சிக் கால் டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.
✦ அரசம்பட்டை, ஆலம்பட்டை சம அளவு எடுத்து சிதைத்து, நான்கு பங்கு நீர் சேர்த்து ஒரு பங்காக வற்றவைத்து அருந்தலாம்.
✦ மாங்கொட்டைப் பருப்பின் பொடியை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து உண்ண லாம்.
✦ நிலப்பூசணிக் கிழங்கின் பொடியுடன் சர் க்கரை, வெண்ணெய்ச் சேர்த்துக் கிண்டி நெல்லிக்காய் அளவு உண்ணலாம்.
✦ வாலுளுவைப் பொடியை இரண்டு கிராம் எடுத்துத் தேனில் கலந்து உண்ணலாம்.
✦ திப்பிலி ஐந்து பங்கு, தேற்றான் மூன்று பங்குசேர்த்து அரைத்து அதில் நான்கு கிராம் நீராகாரத்தில் கலந்து, காலையி ல் குடிக்கலாம்.
✦ மாம்பிசின், விளாம்பிசின் பொடி சம அள வு எடுத்து, அதில் கால் ஸ்பூன் மோரில் கலந்து உண்ணலாம்.
✦ கீழாநெல்லியின் வேர்ப்பொடியை அரை ஸ்பூன் எடுத்து நீராகாரத் துடன் கலந்து உண்ணலாம்.
*🍂சேர்க்க வேண்டியவை🍃*
✦ துவர்ப்புச் சுவை உள்ள உணவுகள், அத்தி ப் பழம், பேரீச்சை, பால், தயிர், காளான், சிகப்புத் தண்டுக்கீரை, ஈரல்.
*🍂நீக்க வேண்டியவை🍃*
✦ இஞ்சி, பூண்டு, காயம், அன்னாசி, எள், பப்பாளி, நல்லெண்ணெய்🔵🔴
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக