செவ்வாய், 15 மே, 2018

சொட்டை மற்றும் வழுக்கை தலையில் புது முடி வளர. வீட்டு வைத்திய முறையில்.

சொட்டை மற்றும் வழுக்கை தலையில் புது முடி வளர. வீட்டு வைத்திய முறையில்.

வணக்கம்
இன்றைக்கு நிறைய பேருக்கு தலை முடி உதிர்வது அதிகமாகி கொண்டே இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இந்த நவீன உலகம். எனவே முடிந்த வரை இயற்கையான வாழ்க்கை வாழ கற்றுக்கொள்ள வேண்டும். இந்த பதிவு ஒருவர் கேட்டு கொண்டதுக்கு இணங்க. வழுக்கை தலையில் முடி வளருமா? வளரும் என்கிறது இயற்க்கை மருத்துவம், மருந்தையும் நமது வீட்டிலேயே தயாரித்து தலையில் தடவலாம்.
தேவையான மூலிகைகள்:
  • மாதுளை முத்துக்கள்
  • சின்ன வெங்காயம்
  • சிறிய துணி
முதலில் தடவுவதற்கு முன்பு வழுக்கை விழுந்த இடத்தில் உள்ள முடிகளை அகற்ற வேண்டும். மேல் தோலில் உள்ள இறந்து போன செல்களை அகற்ற வேண்டும் அப்பொழுது தான் சாறு வேர்கால் வழியாக உள்ளே இறங்கும்.
அதற்காக ரத்தம் வரும் வரை தோலை வழிக்க கூடாது. மாதுளை மற்றும் வெங்காய சாற்றை வழுக்கை தலை மேல் தடவும் பொது முடி வேர் துளை வழியாக ஜூஸ் இறங்க வேண்டும் .

மாதுளை முத்துக்களை மெல்லிய துணியில் இருக்க கட்டிக்கொள்ள வேண்டும் . பிறகு கட்டிய மாதுளையை லேசாக பிழிய வேண்டும் .அதன் பிறகு அதை வழுக்கை விழுந்த இடத்தில தேய்க்க வேண்டும் . மூன்று நாள், ஐந்து நாள் அல்லது தொடர்ந்து கூட தேய்க்கலாம்.

தொடர்ந்து ஐந்து அல்லது பத்து நாட்கள் மாதுளை தேய்த்து வந்த கடைசி நாளுக்கு பிறகு சின்ன வெங்காயம் அப்ளை செய்ய வேண்டும், இதனையும் ஐந்து அல்லது பத்து நாட்கள் அப்பளை செய்யலாம். இதை செய்து முடித்த பிறகு ஒரு நல்ல சுத்தமான தேங்காய் என்னை கொண்டு தேய்க்க வேண்டும்.இந்த பாட்டி வைத்தியத்தை தொடர்ந்து செய்தால் முடி நன்றாக கரு கருவென வளரும்.
மேலும் பல மருத்துவ குறிப்புகள் உங்களுக்கு வேண்டும் என்றால் கீழே உள்ள கமெண்டில் கமெண்ட் பண்ணுங்க. இதேபோல் பல மருத்து குறிப்புகளை தெரிந்து கொள்ள எங்களை Follow பண்ணுங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக