செவ்வாய், 29 மே, 2018

ஆக்சிஜன் இல்லாமல் எவ்வளவு நேரம் உயிரோடு இருக்கலாம்?

ஆக்சிஜன் இல்லாமல் எவ்வளவு நேரம் உயிரோடு இருக்கலாம்?


ஆக்சிஜன் இல்லாமல் மனிதன் சில நிமிடங்களே உயிர்வாழ முடியும். காரணம் ஆக்சிஜன் இல்லாமல் மூளையால் செயல்பட முடியாது. நாம் சுவாசிக்கும்போது உள்ளே செல்லும் ஆக்சிஜனில் 20 சதவீதத்தை நமது மூளையே பயன்படுத்திக்கொள்கிறது. சுமார் 8 முதல் 10 வினாடிகள் மூளைக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் போனாலும் மனிதன் உணர்வற்ற நிலைக்குத் தள்ளப்படுவான். அடுத்த சில நொடிகளில் மூளையின் செல்கள் இறந்து மனிதன் மரண நிலைக்குத் தள்ளப்படுகிறான்.

இருப்பினும் குறைந்த வெப்பநிலையில் மூளையானது மிக்குறைந்த ஆக்சிஜனையே உபயோகிக்கிறது. எனவே நீண்டநேரம் நடைபெறும் அறுவைச்சிகிச்சைகள் மிகக்குறைந்த வெப்பநிலையில் செய்யப்படுகிறது. மற்ற உறுப்புகள் ஆக்சிஜன் இல்லாமலும் சில மணி நேரம் செயல்படுகின்றன. எனவேதான் இறந்த மனிதனது மூளையைத் தவிர மற்ற சில உறுப்புகள், உறுப்பு மாற்று சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகின்றன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக