தண்ணீர் குடிப்பது நிருத்திவிட்டால் என்ன ஆகும்?

மனிதனின் உடலில் 60 - 80 சதவீதம் வறை தண்ணீர் நிரம்பியுள்ளது. செரிமானத்திற்காக மற்றும் கழிவு வெளியேற்றக்கு நீர் அவசியமான ஒன்று. நீர்தான் இரத்தத்தின் மூலதனமாகும்.

ஒரு நாளுக்கு வியர்வை மற்றும் சிறுநீர் கழித்தலினால் 2 - 3 லிட்டர் நீர் வெளியேற்றபடுகிறது. இந்த நீரிழப்பை சரி செய்வதற்க்குதான் நாம் தண்ணீர் குடிக்கிறோம். அப்படி நாம் நீர் குடிக்காமல் இருந்தால் உடல் வறட்சியடையும். உடல் வறட்சியடையும்போது மூளை சாதாரணத்தைவிட கடினமாக வேலை செய்கிறது. நீர் இல்லாததால் அடர்த்தியான மஞ்சள் நிர சிறுநீரை வெளியேற்றும்.

நீரிழப்பு அதிகரித்து வாய் வறட்சியடையும். இந்த நிலை நீடித்தால் மூளை திசுக்கள் சுருங்கி தலைவலி உண்டாகும், சருமம் வறட்சியால் பொழிவிழந்து உலர்ந்த தொற்றம் வரும். நாள்பட்ட நீர்ப்போக்கு மேலும் பல உடல் பிரச்சனைகளை அதிகரித்து மரணம் அடையலாம்.

தண்ணீர் குடிப்பதனால் உடலும் மணமும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் மற்றும் மேலும் பல நன்மைகள் உண்டு. அதனால் எந்த ஒரு காரணத்திற்க்கும் தண்ணீர் அருந்துவதை தவிர்க்காதீர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக