வயிற்று வலியா..? தகுந்த காரணங்களை தெரிந்து கொண்டு தீர்வு காணுங்கள்....
*வயிறு ஒரு பை மாதிரி. அதுக்குள்ள கிட்னி, ஈரல், கல்லீரல், மண்ணீரல், உணவுப்பை, பெருங்குடல், சிறுகுடல், மலக்குடல், கனையம், சிறு நீர்பை, கர்ப்பப்பை,விந்துபை,சினைப்பை என்று அவ்வளவு உறுப்புகள் இருக்கு.
*வயிறு வலிக்குதுன்னு சொன்னா எந்த உறுப்புல பிரச்சனைன்னு புரிஞ்சிக்கிறது ஒரு டாக்டர்க்கே கஷ்டம்.
ஆனால், நீங்க தெரிஞ்சுக்கலாம். எப்படி? இதோ சிம்பிள் டிரிக்.
*வயிறை மேலிருந்து கீழ் மூன்று பகுதியாவும் இடமிருந்து வலமாக மூன்று பகுதியாவும் பிரிச்சிக்கலாம்.
அப்படியே படுக்க வைச்சு கோடு கிழிச்சா மொத்தம் ஒன்பது பகுதிகள் வரும்.
*அதாவது மேல், நடு (தொப்புள் ஏரியா) மற்றும் அடி பகுதி, இடது, நடு (தொப்புள் ஏரியா) மற்றும் வலது பகுதி.
1.மேல்வயிறு வலது மூலையில வலித்தால் - *ஈரலில் பிரச்சனை , பித்தப்பை கல்*.
2.மேல்வயிறு இடது மூலை மற்றும் நடுவில் வலித்தால் - *அல்சர்*.
3.நடுவயிறு வலது மற்றும் இடது மூலையில் வலித்தால் - *நீர்கடுப்பு, கிட்னி ஸ்டோன்*.
4.நடுவயிறு நடுவில் (தொப்புளை சுற்றி) வலித்தால் - *ஃபூட் பாய்சன்*.
5.அடிவயிறு வலது மூலை வலித்தால் - *அப்பன்டிசைடிஸ்*,
6.அடி வயிறு நடுவில் வலித்தால் - *சிறுநீர் பை வீக்கம், கர்ப்பப்பை பிரச்சனைகள்*,
7.அடிவயிறு இடது மூலையில் வலித்தால் - *குடலிறக்கம்*.
இப்போ என்ன பிரச்சனைன்னு நீங்க தெரிஞ்சுக்கிட்டு அப்பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக