ஞாயிறு, 27 மே, 2018

இரவில் தலைக்கு குளிப்பதால்..! இவ்வளவு நன்மைகளா...!

இரவில் தலைக்கு குளிப்பதால்..! இவ்வளவு நன்மைகளா...!

இரவு நேரத்தில் தலைக்கு குளிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை நாம் காணலாம்.
எப்பொழுதுமே நாம் அனைவரும் காலை நேரங்களில் தான் தலைக்கு குளிப்போம். ஆனால் இரவு நேரத்தில் தலைக்கு குளித்தால் பல நன்மைகள் உள்ளது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.
பொதுவாக காலை நேரங்களில் தலைக்கு குளித்தால் தலைக்கு சரியான முறையில் எண்ணெய் தேய்க்க முடியாது, துவட்ட முடியாது இதனால் தலைவலி, சைனஸ் போன்ற நோய்கள் தொற்றிக் கொள்ளும்.
ஆனால் இரவு நேரங்களில் தலைக்கு குளிப்பதால் பல நன்மைகள் உள்ளது. நிதானமாக தலையை சுத்தம் செய்யலாம்.
பெண்கள் காலையில் தலைக்கு குளிக்கும்போது தலைமுடியை நன்கு சரியான முறையில் அலச முடியாது. இரவில் அழுக்கு நன்கு போகும்படி தலைமுடியை சுத்தம் செய்து நிதானமாக அலசலாம்.
இவ்வாறு இரவில் தலைக்கு குளிக்கும்போது தலையில் நன்கு தேவையான அளவு எண்ணெய் சுரப்பிகள் சுரக்க அதிக அவகாசம் இருக்கும். இதனால் தலை வறட்சி இல்லாமல் வெடிப் நீங்கி கூந்தல் பாதுகாக்கப்படும்.
பகலில் தலைக்கு குளிக்கும் போது முடிகள் பலவீனமாக இருக்கும். அந்த நேரத்தில் சூரிய ஒளி பட்டால் கூந்தல் கற்றைகள் அதிகம் பாதிக்கப்படும்.
கூந்தல் அலங்காரம் ;
காலை நேரத்தில் தலை குளித்த பின்பு நன்கு சீவி அலங்காரம் செய்வதால் கூந்தலின் வேர்கள் அதிகம் பாதிக்கப்படும். இரவில் தலை குளித்த பின்பு கூந்தலை அப்படியே விடுவதால் கூந்தல் அதிகம் பாதிக்கப்படுவதில்லை.
நோய்கள் தவிர்க்க படும் :
இரவில் நன்கு தலை குளித்தால் துவட்டுவதற்கு அதிக நேரம் கிடைக்கும் துவட்டுவீர்கள். அதனால் தலையில் நீர் கோர்த்து கொண்டு இருக்கும் வாய்ப்பில்லை. அதனால் சைனஸ், தலைவலி போன்ற பிரச்சனைகள் இருக்காது.
உறக்கம் நன்கு வரும் :
மேலும் இரவில் தலைக்கு குளிப்பதால் நன்கு உறக்கம் வரும். உடனே உறங்கி விடக் கூடாது. கூந்தலை நன்கு துவட்டி விட்டு, காய்ந்த உடன் உறங்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக