செவ்வாய், 29 மே, 2018

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று கூறுவார்கள்.


திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று கூறுவார்கள்.

 "இன்னாருக்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று" என்று ஒரு பாடல் வரி உண்டு.


ஆனால் அந்த துணை கல்யாண வயதில் சீக்கிரமாக கிடைக்கிறதா அல்லது தேடி தேடி கிடைக்கிறதா என்பது ஒவ்வொருவரின் ஜாதகத்தில் மட்டுமே தெரியும்.
 

வாஸ்து

உங்கள் வீட்டின் வாஸ்து கூட உங்கள் வீட்டு திருமணத்தில் தடை உண்டாக்கும் என்பதை நீங்கள் அறிவீர்களா? உங்கள் துணையை நீங்கள் எவ்வளவு தேடியும் கிடைக்காமல் இருக்க உங்கள் வீட்டு வாஸ்து தோஷம் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

அது உண்மைதான். திருமண தடைகள் சிலவற்றிற்கு வாஸ்து தோஷம் மட்டுமே காரணம்.
 

திருமணத்தடை
சரியான நேரத்தில் சரியான ஒரு துணையை தன் பிள்ளைக்கு தேர்ந்தெடுத்து தரும் வரை பெற்றவர்கள் கவலையுடன் தான் இருப்பார்கள்.

அதிலும், சில வரன்கள் வந்தும் திருமணதில் தடைகள் ஏற்பட்டால் அது இன்னும் அதிக கவலையை உண்டாக்கும்.

திருமண வயதை அடைந்தும் திருமணம் தள்ளி போய்க் கொண்டிருக்கும் பிள்ளைகள் உள்ள குடும்பத்தில் இந்த வாஸ்து குறிப்புகளை கவனித்து சரி செய்வதால் உடனடியாக திருமண தடை விலகி, விரைவில் திருமணம் நடக்கும் வாய்ப்பு உண்டு.

 ஆகவே தொடர்ந்து படித்து இந்த வாஸ்து குறிப்புகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

 

உறங்கும் திசை - பெண்

திருமணம் ஆகாத பெண்கள் வீட்டின் தென் மேற்கு மூலையில் உறங்குவதை தவிர்க்க வேண்டும்.

 திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் அதிகரிக்க வட மேற்கு திசையில் உங்கள் படுக்கையை மாற்றுங்கள்.

 ஒரு வேலை அந்த திசையில் படுக்க முடியாமல் போனால், கிழக்கு அல்லது மேற்கு திசையில் உறங்கலாம்.
 

உறங்கும் திசை - ஆண்

திருமணம் ஆகாத ஆணின் படுக்கையறை தென் கிழக்கு திசையில் இருக்கக்கூடாது. வடகிழக்கு திசையில் இருக்கலாம்.

ஒருவேளை அந்த திசையில் படுக்க முடியாமல் இருந்தால், நேரடி தெற்கு அல்லது மேற்கு திசையில் படுத்தால், திருமணத்திற்கான அதிர்வுகள் அதிகரிக்கும்.
 

பெட்ஷிட் நிறம்

உங்களுக்கு ஏற்ற வகையில் ஒரு துணை கிடைக்காமல் தேடிக் கொண்டிருக்கும் ஆண் அல்லது பெண் படுக்கும் பெட்ஷீட் லைட் நிறத்தில் இருக்க வேண்டும். குறிப்பாக பர்பிள், பிங்க், மஞ்சள் மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கலாம்.

இந்த நிறங்கள் நேர்மறை அதிர்வுகள் மற்றும் சரியான ஆற்றலை வெளிபடுத்தும்.
 

தண்ணீர் தொட்டி

வீட்டின் நிலத்தடி நீர்த்தொட்டி தென்மேற்கு திசையில் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஒருவேளை நீர்த்தொட்டி அங்கே இருந்தால், அதனை மாற்றி வேறு இடத்தில் வைக்க திட்டமிட வேண்டும். திருமணத்தில் காலதாமதம் ஏற்பட இது ஒரு மிக்கிய தோஷமாகும்.
 

கட்டில்

விரைவாக திருமணம் நடக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்கள், படுக்கையில் எந்த ஒரு இரும்பு பொருளையும் வைத்திருக்கக் கூடாது.

இரைச்சல் ஏற்படுத்தும் எந்த ஒரு விஷயமும் அந்த அறையில் மற்றும் படுக்கையில் இருக்கக் கூடாது. தூய்மையான மற்றும் இரைச்சல் இல்லாத அறையில் நேர்மறை அதிர்வுகள் அதிகரிக்கும்.
 

பெயிண்ட்

திருமண வயதில் இருக்கும் ஆணின் அறையின் சுவர் நிறங்கள் லைட் நிறத்தில் மஞ்சள், பேபி பிங்க், அல்லது வெள்ளையில் இருக்கலாம்.

 இதனால் விரைவில் திருமணம் நடக்கும். லைட் நிறங்கள் நல்ல ஆற்றலை பிரதிபலிக்கும். சுற்றுசூழலில் ஒரு நேர்மறை ஆற்றலை உருவாக்கும்.

வீட்டின் எல்லா சுவர்களிலும் லைட் நிறங்களில் பெயிண்ட் அடிக்கலாம். குறிப்பாக வண்ணக்கோல் நிறங்களை பயன்படுத்தலாம்.

 இதனால் முழு வீட்டிலும் நேர்மறை அதிர்வுகள் ஏற்பட்டு, திருமண பேச்சு வார்த்தைகள் சூடு பிடிக்கத் தொடங்கும். அடர் நிறங்களான பழுப்பு, கருப்பு போன்ற நிறங்களில் வீட்டின் பெயின்ட் இருக்கக் கூடாது.
 

மாடிப்படி

வீட்டின் நடுவில், மாடிப்படி மற்றும் கனமான பொருட்களை வைக்க வேண்டாம்.

மாடிப்படி போன்றவை வீட்டின் மையப் பகுதியில் இருப்பதால் திருமணத்தில் தாமதம் ஏற்படுகிறது என்று வாஸ்து குறிப்பிடுகிறது.

ஆகவே இதனை நினைவில் கொள்வது அவசியம்.
 

மாங்கல்ய தோஷம்

மாங்கல்ய தோஷத்தால் திருமணத்தில் கால தாமதம் உள்ளவர்கள், அவர்கள் அறையில் கதவை அடர்ந்த சிவப்பு அல்லது பிங்க் நிறத்தில் பெயின்ட் செய்யலாம்.

குறிப்பாக மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள் இதனை அவசியம் பின்பற்றலாம்.

 சிவப்பு அல்லது பிங்க் நிறத்தில் கதவிற்கு பெயின்ட் அடிப்பதால் அவர்களின் மாங்கல்ய தோஷ பாதிப்பு குறைகின்றது.

வட கிழக்கில் இருந்து தென்மேற்கு திசையை நோக்கி சரியும் நிலப்பரப்பை வாங்குவதை தவிர்க்கவும். இந்த நிலத்தை வாங்குவதால் கூட உங்கள் திருமணம் தாமதம் ஆகலாம்.
 

திருமணம்

மேலே கூறிய எளிய வாஸ்து குறிப்புகளை பின்பற்றுவதால் தாமதமாகும். திருமணம் விரைவில் நடக்கும்.

 சில குறிப்புகள் மிகவும் எளிய முறையில் உங்கள் வாழ்வியல் முறையில் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள் மட்டுமே.

 பெற்றோர்களும் இந்த குறிப்புகளுக்கு ஏற்ற விதத்தில்    தங்கள் பிள்ளைகளின் திருமணத்திற்காக குறிப்‬பிடப்பட்டுள்ள மாற்றங்களை செய்யலாம்.

 இதனால் திருமண பேச்சு வார்த்தை தொடர்ந்து நடந்து திருமணம் இனிதே நடைபெறலாம்.

இந்த வாஸ்து குறிப்புகள் மூலம் ஒரு நல்ல துணை உங்களைத் தேடி வரலாம்.

உங்கள் திருமண வாழ்க்கை சிறப்புடன் தொடங்க எங்கள் வாழ்த்துகள் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக